Nethu Oruthara Oruthara Pathom Song Lyrics

Nethu Oruthara Oruthara Pathom Song Lyrics in Tamil from Puthu Pattu Film. Nethu Oruthara Oruthara Pathom Song Lyrics penned by Gangai Amaran

பாடல்:நேத்து ஒருத்தர
ஒருத்தர பாத்தோம்
படம்:புது பாட்டு
வருடம்:1990
இசை:இளையராஜா
வரிகள்:கங்கை அமரன்
பாடகர்:இளையராஜா,
KS சித்ரா

Nethu Oruthara Oruthara Pathom Lyrics

ஆண்: நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

ஆண்: நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

ஆண்: காத்து குளிர்காத்து
கூத்து என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற
காத்துல பூத்தது

ஆண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்ககூட்டுத்தான்
இணைஞ்சதொருகூட்டுத்தான்

ஆண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்ககூட்டுத்தான்
இணைஞ்சதொருகூட்டுத்தான்

பெண்: நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

பெண்: ஆத்தங்கரையோரம்
பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம்
பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்

ஆண்: அடி ஆத்தி ஆத்திமரம்
அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
பெண்: மாத்தி மாத்தி தரும்
மனசு வச்சு மால போட வரும்

ஆண்: பூத்தது பூத்தது பார்வ
போர்த்துது போர்த்துது போர்வ
பெண்: பாத்ததும் தோளில தாவ
கோர்த்தது கோர்த்தது பூவ

ஆண்: போட்டா கண போட்டா
கேட்டா பதில் கேட்டா
பெண்: வழி காட்டுது
பலசுகம் கூட்டுது வருகிற

ஆண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
இணைஞ்சதொரு கூட்டுத்தான்

பெண்: நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
ஆண்: ஒருத்தர ஒருத்தர பாத்தோம்

பெண்: பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்
ஆண்: ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண்: அழகா சுதி கேட்டு
நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு
தினம் நடக்கும் காதல் விளையாட்டு

பெண்: இந்த மானே மரகதமே
ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
ஆண்: பாடும் ஒரு வரமே
எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே

பெண்: பாத்தொரு மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் போச்சு
ஆண்: காத்துல கரையுது மூச்சு
காவிய மாகிட லாச்சு

பெண்: பாத்துவழி பாத்து
சேத்துஒன்ன சேத்து
ஆண்: அரங்கேத்துது மனசுல
பூத்தது பூத்தது

பெண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
இணைஞ்சதொரு கூட்டுத்தான்

ஆண்: நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பெண்: ஒருத்தர ஒருத்தர பாத்தோம்

ஆண்: பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்
பெண்: ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண்: காத்து
பெண்: குளிர் காத்து
ஆண்: கூத்து
பெண்: என்ன கூத்து
ஆண்: சிறு நாத்துல நடக்குற
காத்துல பூத்தது

பெண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
ஆண்: தனக்குத்தக்ககூட்டுத்தான்
இணைஞ்சதொருகூட்டுத்தான்

பெண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
ஆண்: தனக்குத்தக்ககூட்டுத்தான்
இணைஞ்சதொருகூட்டுத்தான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *