Mama Un Pera Song Lyrics in Tamil from Manju Virattu Movie. Mama Un Pera Nenjukulle Song Lyrics has penned in Tamil by Vaali
படத்தின் பெயர்: | மஞ்சு விரட்டு |
---|---|
வருடம்: | 1994 |
பாடலின் பெயர்: | மாமா உம் பேரை |
இசையமைப்பாளர்: | தேவா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா |
Mama Un Pera Lyrics in Tamil
பெண்: மாமா உம் பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
ஆண்: மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெண்: மாமா உம் பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
ஆண்: இள மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெண்: நான் எத்தனையோ பொத்திவச்சும்
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு
ஆண்: அது அத்தனையும் மொத்தத்துல
ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு
பெண்: மாமா உம் பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
ஆண்: இள மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
ஆண்: நெஞ்சுக்குள்ள நேசமென்னும்
நாத்து நட்டேன் நேத்து
நட்டதெல்லாம் நெல்மணியா
நிக்குதடி பூத்து
பெண்: வஞ்சிப் பொண்ணு தாவணிய
தூக்குதைய்யா காத்து
ஒத்திப் போக சொல்லாம நீ
சொக்குறியே பாத்து
ஆண்: நானென்ன செய்ய
வம்பு பண்ணுது எம்மனது
பெண்: நாணம் இல்லாம
சும்மா நிக்கிமா பெண் மனது
ஆண்: வெக்கம் நீங்கிடுமா
இன்னும் நாடகமா மானே
ஆண்: இள மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெண்: என் மாமா உம்பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
பெண்: பத்தமடை பாய் விரிச்சு
நான் படுத்தா போச்சு
பத்த வச்ச சூளை போல
சூடாகுதே மூச்சு
ஆண்: வெண்ணிலவ தூது விட்டு
சேதி சொல்லு நாளும்
வேலையெல்லாம் விட்டுப்புட்டு
ஓடி வாரேன் நானும்
பெண்: நீ வரவேண்டி
உயிர் நித்தமும் தத்தளிக்கும்
ஆண்: ஆயிரம் வாட்டி
மனம் உன் பெயர் உச்சரிக்கும்
பெண்: ராப்பகலாக
என்னை வேதனை பண்ணுறியே
ஆண்: பூப்படைஞ்சாலே
தூக்கம் போயிடும் பைங்கிளியே
பெண்: இன்னும் ஏங்கிடுமா
மனம் தாங்கிடுமா மாமா
பெண்: என் மாமா உம்பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
ஆண்: இள மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெண்: என் மாமா உம்பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
ஆண்: இள மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்
பெண்: நான் எத்தனையோ பொத்திவச்சும்
பொத்துக்கிட்டு ஆசை பொங்கிடுச்சு
ஆண்: அது அத்தனையும் மொத்தத்துல
ரத்தத்துல ஆறா பாஞ்சிடுச்சு
பெண்: மாமா உம்பேரை
நெஞ்சுக்குள்ள பச்ச குத்தி வச்சேன்
ஆண்: இள மானே உன் அழகை
செந்தமிழில் பாட்டா கட்டி வச்சேன்