Kannamma Kadhalenum Song Lyrics in Tamil from Vanna Vanna Pookkal Movie. Kannamma Kadhalenum Song Tamil Lyrics has written by Ilaiyaraaja.
படத்தின் பெயர்: | வண்ண வண்ண பூக்கள் |
---|---|
வருடம்: | 1992 |
பாடலின் பெயர்: | கண்ணம்மா |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | இளையராஜா |
பாடகர்கள்: | இளையராஜா, எஸ்.ஜானகி |
பாடல் வரிகள்:
ஆண்: கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
ஆண்: உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
வாராயோ வாராயோ
ஆண்: கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
பெண்: புன்னை மர தோப்போரம்
உன்னை நினைத்து
முன்னம் சொன்னா குயில் பாட்டு
சொல்லி மகிழ்ந்தேன்
பெண்: பொன்னி நதிக்கரையோரம்
மன்னன் நினைவில்
கண் இமைகள் மூடாது
கன்னி இருந்தேன்
ஆண்: வெண்ணிலவின் ஒளி கனலாய்
கொதிக்குதடி
எண்ணம் நிலை இல்லாமல்
தவிக்குதடி
பெண்: உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
வாராயோ வாராயோ
ஆண்: கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
ஆண்: இன்னும் என்னை வெகு தூரம்
கூட்டி செல்லடி
பன்னிசையில் பாடங்கள்
மாற்றி சொல்லடி
ஆண்: கன்னி உந்தன் மன கூண்டில்
என்னை தள்ளடி
கண்ணசைத்து அங்கேயே
வைத்து கொள்ளடி
பெண்: மந்திரத்தை மாற்றாமல்
கற்றுகொடுத்தால்
விந்தைகளை ஏராளம்
சொல்லி தருவேன்
பெண்: உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
வாராயோ வாராயோ
ஆண்: கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
ஆண்: உந்தன் கிள்ளை மொழியினிலே
பெண்: உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
ஆண்: துள்ளி துள்ளி வரும் நடையில்
பெண்: மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
ஆண்: உன்னை காண வேண்டும் கூட வேண்டும்
பெண்: வாராயோ வாராயோ
ஆண்: கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
கண்ணம்மா
காதல் என்னும் கவிதை சொல்லடி