Ila Nenje Vaa Song Lyrics in Tamil Font from Vanna Vanna Pookkal Movie. Ila Nenje Vaa Song Tamil Lyrics has written by Vaali.
படத்தின் பெயர்: | வண்ண வண்ண பூக்கள் |
---|---|
வருடம்: | 1992 |
பாடலின் பெயர்: | இளநெஞ்சே வா |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | கே.ஜே.இயேசுதாஸ் |
பாடல் வரிகள்:
இளநெஞ்சே வா நீ இங்கே வா
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
பச்சைப் புல் மெத்தை விரிக்கும்
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே
இந்நேரம்
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே
இந்நேரம்
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்
இளநெஞ்சே வா தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்