Jinginakku Jinakku Song Lyrics in Tamil from Enga Ooru Pattukaran Movie. Jinginakku Jinakku Song Tamil Lyrics has written by Gangai Amaran.
படத்தின் பெயர்: | எங்க ஊரு பாட்டுக்காரன் |
---|---|
வருடம்: | 1987 |
பாடலின் பெயர்: | ஜின்ஜனக்கு ஜனக்கு |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | கங்கை அமரன் |
பாடகர்கள்: | மனோ, எஸ்.ஜானகி |
பாடல் வரிகள்:
ஆண்: ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு நான்
சொல்லி தாரேன் கணக்கு
பெண்: பூவாச்சி செங்காயாச்சி
அது கனியாச்சு இப்போது
ஆண்: ஜின்ஜனக்கு ஜனக்கு
பெண்: நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு
ஆண்: நான் சொல்லி தாரேன் கணக்கு
ஆண்: சொக்குதடி கண்ணு எனக்கு
அட என்ன வேணும் சொல்லு உனக்கு
வைக்கபோரு மெத்தை இருக்கு
அடி வாடி புள்ள வெக்கம் எதுக்கு
பெண்: தள்ளி போங்க
மெல்லமா ஆசைய அள்ளி தாங்க
உள்ளே போங்க
கொஞ்சமா கதைகள சொல்லி தாங்க
ஆண்: பூட்ட போட்டு பூட்டி பாத்தேன்
பிஞ்சி போச்சு தாப்பாழு
வானம் பாத்து மானம் பாத்து
காஞ்சி போச்சி வாய்க்காலு
பெண்: உன் கதைக்கு என் உடம்பு தாங்காது
அப்புறமா கண்ணு ரெண்டும் தூங்காது
ஆண்: இந்த பாட்டுக்காரன மயக்கனும்
அணைக்கணும் இன்னைக்கு
பெண்: ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு நான்
சொல்லி தாரேன் கணக்கு
ஆண்: பூவாச்சி செங்காயாச்சி
அது கனியாச்சு இப்போது
பெண்: ஜின்ஜனக்கு ஜனக்கு
ஆண்: நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு
பெண்: நான் சொல்லி தாரேன் கணக்கு
பெண்: தெனம் தெனம் மாவும் இருக்கு
இந்த செம்புக்குள்ள பாலும் இருக்கு
ஹேய் தாகம் உள்ள மாமன் உனக்கு
சொக்க தங்கம் போல உள்ளம் இருக்கு
ஆண்: இப்பதாண்டி
நான் அட்டையா ஒட்டுவேன் கிட்ட வாடி
ஒத்தி போட்டு
நான் மொத்தமா காட்டுவேன் தொட்டு தாடி
பெண்: மாமன் போற போக்க பாத்தா
வேகம் இப்போ ஓயாது
தாளம் போட்டு தட்டி பாடும்
சங்கீதம் தான் தீராது
ஆண்: கண்ணுமணி சொன்ன படி நீ கேளு
எண்ணிக்கனும் இன்பங்களை இனிமேலு
பெண்: அடிக்கடி தான் தொட்டுக்கணும்
கட்டிக்கணும் இன்னைக்கு
ஆண்: ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
பெண்: பூவாச்சி செங்காயாச்சி
அது கனியாச்சு இப்போது
ஆண் : ஜின்ஜனக்கு ஜனக்கு
பெண்: நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜின்ஜனக்கு ஜனக்கு
ஆண்: நான் சொல்லி தாரேன் கணக்கு