Guruvayurappa Song Lyrics in Tamil from Puthu Puthu Arthangal Movie. Guruvayurappa Song Lyrics has penned in Tamil by Vaali.
பாடல்: | குருவாயூரப்பா |
---|---|
படம்: | புதுப்புது அர்த்தங்கள் |
வருடம்: | 1989 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | வாலி |
பாடகர்: | SP பாலசுப்ரமணியம், KS சித்ரா |
Guruvayurappa Song Lyrics in Tamil
ஆண்: குருவாயூரப்பா
குருவாயூரப்பா
குருவாயூரப்பா
குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி
பெண்: குருவாயூரப்பா
குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை
நீதானே பாக்கி
ஆண்: ராதை உனக்குச்
சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை
ஆண்: ராதை உனக்குச்
சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை
பெண்: குருவாயூரப்பா
குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி
ஆண்: தேனாற்றங்கரையில்
தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
பெண்: தினம்தோறும் இரவில்
நடு ஜாமம் வரையில்
நான்தானே அதை கேட்டிருந்தேன்
ஆண்: அரங்கேற்றம்தான்
ஆகாமல்தான்
அலைபாயும்
என் ஜீவன் தான்
பெண்: வா வா என் தேவா
செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே
ஆண்: குருவாயூரப்பா
குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி
பெண்: ஏகாந்த நினைவும்
எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க
ஆண்: எனை வந்து தழுவு
ஏன் இந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பெண்: பரிமாறலாம்
பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
ஆண்: மாது உன் மீது
இப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே
ஆண் குருவாயூரப்பா
குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி
பெண்: குருவாயூரப்பா
குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை
நீதானே பாக்கி
ஆண்: ராதை உனக்குச்
சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை
பெண்: குருவாயூரப்பா
குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி
ஆண்: நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி