Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Yaaro Yarukkul Ingu Yaaro Song Lyrics

Yaaro Yarukkul Ingu Yaaro Song Lyrics in Tamil from Chennai 600028 Movie. Yaaro Yarukkul Ingu Yaaro Song Lyrics has penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:சென்னை 600028
வருடம்:2007
பாடலின் பெயர்:யாரோ யாருக்குள் இங்கு
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம்,
KS சித்ரா

பாடல் வரிகள்

ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
பெண்கள்: உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
பெண்கள்: உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண்: காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

பெண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
ஆண்கள்: உயிர் காதல் ஒரு வேள்வி

பெண்: ஊரை வெள்ளும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஆண்: நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றால்
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

பெண்: காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
ஆண்: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னை வாழ ஆகாது
அன்பே வா ஹே

ஆண்: யாரோ
பெண்: யாருக்குள் இங்கு யாரோ
ஆண்: யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
பெண்: விடை இல்லா ஒரு கேள்வி
ஆண்: உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண்: உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

பெண்: கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆகிவிடும்

ஆண்: காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேந்தான்
பெண்: ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா ஹோ

ஆண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
பெண்கள்: உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண்: காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

பெண்: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
ஆண்கள்: உயிர் காதல் ஒரு வேள்வி


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.