Englishkaran Movie Yaaradhu Yaaradhu Song Lyrics in Tamil Font. Yaaradhu Yaaradhu Song Tamil Lyrics has penned by Snehan.
படத்தின் பெயர்: | இங்கிலீஸ்காரன் |
---|---|
வருடம்: | 2005 |
பாடலின் பெயர்: | யாரது யாரது |
இசையமைப்பாளர்: | டி.இமான் |
பாடலாசிரியர்: | சினேகன் |
பாடகர்கள்: | ஸ்ரேயா கோஷல் |
பாடல் வரிகள்:
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
விளக்கின் அடியில் தேங்கி இருக்கும்
இருட்டை யாரும் பார்ப்பதில்லை
யாரது யாரது யாரது…
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
ஒரே நிலா தினம் விடாமல் முகம் காட்டுமா
ஒரே மரம் தினம் நூறாய் நிறம் காட்டுமா
அதே கடல் தினம் தினம் இசை மீட்டுமா
அதே விழி கனாக்களை நிதம் மாற்றுமா
தண்ணீரில் தத்தளித்தது
எறும்புகள் நின்றாலும்
ஏதோ ஓர் இலை வந்து
பின்தொடர்ந்து படகாகும்
வெளிச்சம் வரும் வழியை நீ
சொல் சொல் சொல் சொல்
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
மேகங்களே மழை நினைய திரை செய்யுமா
மரங்களே மைனாவுக்கு ஓர் வலை ஆகுமா
பட்டாம்பூச்சி ரயில் தடம் மேலே பறக்குமா
வேரின் மேலே வெந்நீர் விட்டால் பூ பூபோக்குமா
வெயில் தரும் புழுக்கமெல்லாம்
மழை வர வழி வகுக்கும்
வலி தரும் பெருஞ்சுமைதான்
மழலைக்கு வழி வகுக்கும்
வெளிச்சம் வரும் வழியை நீ
சொல் சொல் சொல் சொல்
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
விளக்கின் அடியில் தேங்கி இருக்கும்
இருட்டை யாரும் பார்ப்பதில்லை
யாரது யாரது யாரது…
யாரது… யாரது…
நி ச நி ச க… நி ச நி ச க…
ச க ச க ம… ச க ச க ப ம க ம க ரி
யாரது… யாரது…
க ம ப ம ப ம க ம க ரி க ச
க ம ப ம ப நி த நி ச நி த ம க ரி
யாரது… யாரது…
த ம ப நி த ம ப நி த ம ப நி
நி ச நி ச நி ச நி ச
க ரி ச நி த நி த ப ம க ரி ச
யாரது… யாரது…
ப த நி ம நி ச க ரி நி ப
ப த நி ரி ச நி ப ம க ரி ச நி