Unna Vida Song Lyrics in Tamil from Virumandi Movie. Unna Vida Intha Ulagathil Song Lyrics has penned in Tamil by Kamal Hasan.
பாடல்: | உன்னை விட இந்த உலகத்தில் |
---|---|
படம்: | விருமாண்டி |
வருடம்: | 2004 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | கமல்ஹாசன் |
பாடகர்: | கமல்ஹாசன், ஸ்ரேயா கோஷல் |
Unna Vida Intha Ulagathil Lyrics in Tamil
பெண்: உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை
ஒன்னும் இல்லை
பெண்: உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை
ஒன்னும் இல்லை
ஆண்: உன்னை விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை யாருமில்லை
பெண்: வாக்கபட
கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல
சந்திரன் வருவாண்டி
பெண்: சாதி சனம் எல்லாம்
அவன் தான்டி
கேட்ட வரம்
உடனே தந்தான்டி
பெண்: என்னை விட
உன்னை சரிவர புரிஞ்சிக்க
யாருமில்லை எவளுமில்லை
ஆண்: உன்னை விட
பெண்: என்னை விட
பெண்: அல்லி கொடிய
காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு
உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம்
என்னை போலவே
அலை பாயுது
ஆண்: நிலவில் காயும்
வேட்டி சேலையும்
நம்மை பார்த்து
ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே
துதி பாடுது சுதி சேருது
பெண்: என்ன புது தாகம்
அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கானாக்களா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா
மோட்சமா மோட்சமா
ஆண்: உன்னை விட
ஆண்: காட்டு வழி
காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு
அது கோயில் மணி
ஆண்: ராத்திரியில் புல்வெளி
நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு
அது மூடு பனி
பெண்: உன்னை விட
பெண்: உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும்
அத கேட்குறேன் சாமியே
ஆண்: நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம்
அந்த சாமிய அந்த சாமிய
பெண்: காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆண்: ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கனும்
இருக்கனும் கலக்கனும்
பெண்: உன்னை விட
இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை
ஒன்னும் இல்லை
ஆண்: உன்னை விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை எவளுமில்லை
ஆண்: வாழ்க்கை தர
வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல
சந்திரன் வருவாண்டி
பெண்: சாதி சனம் எல்லாம்
அவன் தான்டி
கேட்ட வரம்
உடனே தந்தான்டி
ஆண்: உன்னை விட
ஒரு உறவுன்னு சொல்லிக்கிட
யாருமில்லை யாருமில்லை
பெண்: என்னை விட
ஆண்: உன்னை விட