Unna Pola Oruthana Song Lyrics in Tamil from Vetrivel Movie. Unna Pola Oruthana Song Lyrics penned in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர்: | வெற்றிவேல் |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | ஒன்ன போல ஒருத்தர |
இசையமைப்பாளர்: | D.இமான் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | ஸ்ரேயா கோஷல் |
பாடல் வரிகள்:
ஒன்ன போல ஒருத்தர
நா பாத்ததே இல்ல
ஒ ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
ஒன்ன போல ஒருத்தர
நா பாத்ததே இல்ல
ஒ ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேக்குமுன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கும் சொந்தம் நீதானே
ஒன்ன போல ஒருத்தர
நா பாத்ததே இல்ல
ஒ ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
ஒன்ன போல ஒருத்தர
நா பாத்ததே இல்ல
ஒ ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
உன்ன எதிா்பாா்த்து தான்
என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே
உன்னை அது சோ்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று
வாடி நின்ற போதிலே
முத்துமணி தோில் என்னை
ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வாா்த்தையில்
எனை உறவாக்கினாய்
உன் உறவென்பது
யுக யுகங்களை கடந்தது தானே
ஒன்ன போல ஒருத்தர
நா பாத்ததே இல்ல
ஒ ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
உன்னுடைய சாலையில்
நின்று மலா் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழ்வதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
என்னை ஆளவே
வந்த மகராசனே
நான் உனக்காகவே
பல பிறவிகள் துணை வருவேனே
ஒன்ன போல ஒருத்தர
நா பாத்ததே இல்ல
ஒ ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
ஒன்ன போல ஒருத்தர
நா பாத்ததே இல்ல
ஒ ஒசரம் பாத்து வானம் கூட
குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேக்குமுன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கும் சொந்தம் நீதானே
சிறுகுறிப்பு:
வெற்றிவேல் என்பது 2016-ல் வெளியான நாடக திரைப்படம் ஆகும். இதனை வசந்த மணி இயக்கியுள்ளார். இதில் சசிகுமார், மியா, பிரபு, நிகிலா விமல், வர்ஷா பொல்லம்மா, தம்பி ராமையா, ஆனந்த் நக், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இதன் பாடல் வரிகளை மோகன் ராஜன், யுகபாரதி இருவரும் எழுதியுள்ளனர். மேலும் அறிய