Thendral Serial Title Song Lyrics in Tamil from Sun TV. Thendral Serial Title Song Lyrics were written in Tamil by Yugabharathi. This Song was sung by Karthik and the music was composed by Kiran.
| பாடல்: | போராடவே உருவான பாவைகளே |
|---|---|
| நாடகம்: | தென்றல் |
| வருடம்: | 2009 |
| இசை: | கிரண் |
| வரிகள்: | யுகபாரதி |
| பாடகர்: | கார்த்திக் |
Thendral Serial Title Song Lyrics
போராடவே உருவான பாவைகளே
நாள் யாவுமே ஜெயம் ஆகும் தேதியிலே
உன் வேதனைகள் பனி போலே நீங்கி விடும்
உன் தேவைகளை வரும் காலம் மீட்டு தரும்
விழி நீரில் கரைந்திடும் நீயே
விடை தேடிட எழுந்திட வேண்டும்
புகை மூடிய அடுக்களை நீங்கி
பகை போக்கிட துணிந்திட வேண்டும்
உலகமே சேரும் பெண்ணே வா வா
போராடவே உருவான பாவைகளே
நாள் யாவுமே ஜெயம் ஆகும் தேதியிலே
பெண் என்பவள் பூ இல்லையே
பூகம்பம் நேர்த்திடும் வேளையிலே
பெண் என்பவள் தேன் இல்லையே
தேள் வந்து தீண்டும் சூழலிலே
பெண் என்பவள் மீன் இல்லையே
ஆண் போடும் தூண்டிலை சேர்ந்து விட
பெண் என்பவள் தேர் இல்லையே
எப்போதும் ஆணின் கைகள் தொட
பெண்ணாலே தோன்றிய பூமி
பெண்ணை நீக்குவதா
கண்ணீரில் தீட்டிய கோலம்
கண்ணை தாக்குவதா
விதி மாறவே விடை காணவே
துணிவோம் துணிவோம்
துயரை களைவோம்
போராடவே உருவான பாவைகளே
நாள் யாவுமே ஜெயம் ஆகும் தேதியிலே
ஊராளவே நாடாளவே
பெண்ணென்று பேசிடும் வேளையிலே
உன் கண்ணிலே நீர் சிந்தி நீ
நிக்கின்றாய் நாளும் பூமியிலே
தோட்காமலே முன்னேறுவால்
பெண் என்று மாறிய சூழலிலே
சோகங்களை நீ தூக்கியே
கொஞ்சாதே வாழும் வாழ்க்கையிலே
போராட நீ துணியாமல்
காலம் மாறாதே
தீராத வேதனையோடு
பூவே வாடாதே
நிலை மாற்றிட துயர் நீக்கிட
எழுவாய் எழுவாய் புயலாய் எழுவாய்
போராடவே உருவான பாவைகளே
நாள் யாவுமே ஜெயம் ஆகும் தேதியிலே
Tamil Serial Song Lyrics
Poradave Uruvana Paavaigale
Naal Yaavume Jeyam Aagum Thethiyile
Un Vethanaigal Pani Pole Neengi Vidum
Un Thevagalai Varum Kaalam Meettu Tharum
Vizhi Neerinil Karainthidum Neeye
Vidai Thedida Ezhunthida Vendum
Pugai Moodiya Adukalai Neengi
Pagai Pokkida Thunindhida Vendum
Ulagame Serume Penne Vaa Vaa
Poradave Uruvana Paavaigalae
Naal Yaavume Jeyam Aagum Thethiyile
Penn Enbaval Poo Illaiye
Boogambham Nernthidum Velaiyile
Penn Enbaval Thaen Illaiye
Thael Vanthu Theendum Soozhalile
Penn Enbaval Meen Illaiye
Aan Podum Thoondilai Sernthu Vida
Penn Enbaval Thaer Illaiye
Eppothum Aanin Kaigal Thoda
Pennale Thondriya Bhoomi
Pennai Neekuvathaa
Kanneeril Theettiya Kolam
Kannai Thaakkuvadha
Vidhi Maarave Vidai Kaanave
Thunivom Thunivom Thuyarai Kazhaivom
Poradave Uruvana Paaivaigale
Naal Yaavume Jeyam Aagum Thethiyile
Ooraalave Naadalave
Pennendru Pesidum Velaiyile
Un Kannile Neer Sinthi Nee
Nikkindraai Naalum Bhoomiyile
Thotkaamale Munneruvaal
Penn Endru Maariya Soozhalile
Sogangalai Nee Thookkiye
Konjaathe Vaazhum Vaazhkaiyile
Poraada Nee Thuniyamal
Kaalam Maarathe
Theeratha Vethanaiyodu
Poove Vaadathe
Nilai Maatrida Thuyar Neekkida
Ezhuvaai Ezhuvaai Puyalaai Ezhuvaai
Poradave Uruvana Paavaigale
Naal Yaavume Jeyam Aagum Thethiyile
