Malayanooru Angalamma Song Lyrics in Tamil | Amman Songs

Malayanooru Angalamma Song Lyrics in Tamil from Pambai Udukkai Devotional Album. Malayanooru Angalamma Song Lyrics have been sung in Tamil by Pushpavanam Kuppusamy.

Malayanooru Angalamma Lyrics

ஆண்: மலையனூரு அங்காளம்மா
தாயே மலையனூரு அங்காளம்மா
தாயே மங்கையரே வாருமம்மா
குழு: மலையனூரு அங்காளம்மா
தாயே மங்கையரே வாருமம்மா

ஆண்: நடலை சுடலைவனம்
தாயே நடலை சுடலைவனம்
தாயே நடுசுடலை தில்லைவனம்
குழு: நடலை சுடலைவனம்
தாயே நடுசுடலை தில்லைவனம்

ஆண்: தில்லை வனத்தை விட்டு
தில்லை வனத்தை விட்டு
நீ திரும்பி வர வேணும் அம்மா
குழு: தில்லை வனத்தை விட்டு
நீ திரும்பி வர வேணும் அம்மா

ஆண்: ஜடைய தலை விரித்தாய்
நீ ஜடைய தலை விரித்தாய்
நீ சாம்பலிலே பள்ளிகொண்டாய்
குழு: ஜடைய தலை விரித்தாய்
நீ சாம்பலிலே பள்ளிகொண்டாய்

ஆண்: பள்ளி கொண்ட பாங்கினையே
தாயே பள்ளி கொண்ட பாங்கினையே
நாங்க பார்க்க முடியலையே
குழு: பள்ளி கொண்ட பாங்கினையே
நாங்க பார்க்க முடியலையே

ஆண்: கஞ்சுழியும் கவ்வாடையும்
தாயே கஞ்சுழியும் கவ்வாடையும்
தாயே கை நிறைந்த கபாலமும்
குழு: கஞ்சுழியும் கவ்வாடையும்
தாயே கை நிறைந்த கபாலமும்

ஆண்: கஞ்சுழிய கையில் எடுத்து
அம்மா கஞ்சுழிய கையில் எடுத்து
அம்மா கட்டழகி வாருமம்மா
குழு: கஞ்சுழிய கையில் எடுத்து
அம்மா கட்டழகி வாருமம்மா

ஆண்: பிரம்ம கபாலம் என்போம்
பிரம்ம கபாலம் என்போம்
அதை கையில் பிடித்தவளே
குழு: பிரம்ம கபாலம் என்போம்
அதை கையில் பிடித்தவளே

ஆண்: கையில் புடித்தவளே
கையில் புடித்தவளே
அதை காடு கொண்ட ஆண்டிக்கு நீ
குழு: கையில் புடித்தவளே
அதை காடு கொண்ட ஆண்டிக்கு நீ

ஆண்: தந்து வந்த சுடலைவனம்
அம்மா தந்து வந்த சுடலைவனம்
நீ சூழ்ந்து வந்த தில்லைவனம்
குழு: தந்து வந்த சுடலைவனம்
தந்து வந்த சுடலை வனம்
நீ சூழ்ந்து வந்த தில்லைவனம்

ஆண்: தில்லைவன எல்லையிலே
தாயே தில்லைவன எல்லையிலே
உன்னை தேடி அழைக்கிறோமே
குழு: தில்லைவன எல்லையிலே
உன்னை தேடி அழைக்கிறோமே

ஆண்: சுடலைவனம் தேடி வந்தாய்
அம்மா சுடலைவனம் தேடி வந்தாய்
உனக்கு சுட்ட பொனம் பூ மணக்கும்
குழு: சுடலைவனம் தேடி வந்தாய்
உனக்கு சுட்ட பொனம் பூ மணக்கும்

ஆண்: மயானத்தை தேடி வந்தாய்
அம்மா மயானத்தை தேடிவந்தாய்
அம்மா மாண்ட பொனம் பூ மணக்கும்
குழு: மயானத்தை தேடி வந்தாய்
அம்மா மாண்ட பொனம் பூ மணக்கும்

ஆண்: புகை அடிக்கும் சுடலையிலே
தாயே புகை அடிக்கும் சுடலையிலே
தாயே பூ மணக்கும் வாசம் வரும்
குழு: புகை அடிக்கும் சுடலையிலே
தாயே பூ மணக்கும் வாசம் வரும்

ஆண்: அங்கமுன்னா ஆறு மொளம்
அம்மா அங்கமுன்னா ஆறு மொளம்
உனக்கு சிங்கமுன்னா ஏழு மொளம்
குழு: அங்கமுன்னா ஆறு மொளம்
உனக்கு சிங்கமுன்னா ஏழு மொளம்

ஆண்: பவளக்குடி எல்லையிலே
தாயே பவளக்குடி எல்லையிலே
தாயே பரிவு கொண்ட நாயகியே
குழு: பவளக்குடி எல்லையிலே
தாயே பரிவு கொண்ட நாயகியே

ஆண்: பவளக்குடி எல்லை விட்டு
அம்மா பவளக்குடி எல்லை விட்டு
அம்மா பத்தினியே வந்தமர்ந்தாள்
குழு: பவளக்குடி எல்லை விட்டு
அம்மா பத்தினியே வந்தமர்ந்தாள்

ஆண்: சித்தனூரு எல்லையிலே
அம்மா சித்தனூரு எல்லையிலே
அடி செல்வியே நீ அமர்ந்தாய்
குழு: சித்தனூரு எல்லையிலே
அடி செல்வியே நீ அமர்ந்தாய்

ஆண்: சலங்கப்பட்டி எல்லையிலே
தாயே சலங்கப்பட்டி எல்லையிலே
தாயே சித்துடனே அமர்ந்தவளே
குழு: சலங்கப்பட்டி எல்லையிலே
தாயே சித்துடனே அமர்ந்தவளே

ஆண்: அங்கே ஆடாத பேய்களையே
அங்கே ஆடாத பேய்களையே
அம்மா ஆட்டி வைக்கும் அங்காளியே
குழு: அங்கே ஆடாத பேய்களையே
அம்மா ஆட்டி வைக்கும் அங்காளியே

ஆண்: ஓடாத பேய்களையே
அம்மா ஓடாத பேய்களையே
அம்மா ஓட்டிவிக்கும் அங்காளியே
குழு: ஓடாத பேய்களையே
அம்மா ஓட்டிவிக்கும் அங்காளியே

ஆண்: பூங்காவன மயிலே
நீ பூங்காவன மயிலே
நீ புறப்பட்டு வாருமம்மா தாயே
குழு: பூங்காவன மயிலே
நீ புறப்பட்டு வாருமம்மா

ஆண்: மலையனூரு எல்லையிலே
அம்மா மலையனூரு எல்லையிலே
அம்மா மனம் குளிர வந்தவளே
குழு: மலையனூரு எல்லையிலே
அம்மா மனம் குளிர வந்தவளே

ஆண்: ஆங்காரா சக்தியம்மா
தாயே ஆங்காரா சக்தியம்மா
எங்க அங்காள ஈஸ்வரியே
குழு: ஆங்காரா சக்தியம்மா
எங்க அங்காள ஈஸ்வரியே

ஆண்: ஓங்கார சக்தியம்மா
நீ ஓங்கார சக்தியம்மா
எங்க உமையவளே வாருமம்மா
குழு: ஓங்கார சக்தியம்மா
எங்க உமையவளே வாருமம்மா

ஆண்: கஞ்சுழியும் கபாலமும்
கஞ்சுழியும் கபாலமும்
கை நிறைந்த சூலமுடன்
குழு: கஞ்சுழியும் கபாலமும்
கை நிறைந்த சூலமுடன்

ஆண்: கஞ்சுழியை ஏந்தி அள்ளும்
கஞ்சுழியை ஏந்தி அள்ளும்
அம்மா கட்டழகி வாருமம்மா
குழு: கஞ்சுழியை ஏந்தி அள்ளும்
கட்டழகி வாருமம்மா

ஆண்: தாயாரே ஆடி வந்தாள்
எங்க தாயாரே ஆடி வந்தாள்
எங்க தமிழ் எல்லாம் பூ மணக்கும்
குழு: தாயாரே ஆடி வந்தாள்
எங்க தமிழ் எல்லாம் பூ மணக்கும்

ஆண்: ஆடி வரும் நாயகியே
அங்காள ஈஸ்வரியே
குழு: ஆடி வரும் நாயகியே
அங்காள ஈஸ்வரியே

ஆண்: ஓடி வரும் நாயகியே
உத்தமியே வாருமம்மா
குழு: ஓடி வரும் நாயகியே
உத்தமியே வாருமம்மா

ஆண்: ஓடாத பேய்களையே
ஓட்டிவிடும் தாயாரே
குழு: ஓடாத பேய்களையே
ஓட்டிவிடும் தாயாரே

ஆண்: ஆடாத பேய்களையே
ஆட்டி வைக்கும் தாயாரே
குழு: ஆடாத பேய்களையே
ஆட்டி வைக்கும் தாயாரே

ஆண்: பில்லி சூனியம் எல்லாம்
புறப்பட்டு ஓட வைத்தாய்
குழு: பில்லி சூனியம் எல்லாம்
புறப்பட்டு ஓட வைத்தாய்

ஆண்: எல்லைக்கு எல்லையிலே
எழுந்து நீ வந்திடுவாய்
குழு: எல்லைக்கு எல்லையிலே
எழுந்து நீ வந்திடுவாய்

ஆண்: ஆங்காரா சக்தியம்மா
அங்காள சக்தியம்மா
குழு: ஆங்காரா சக்தியம்மா
அங்காள சக்தியம்மா

ஆண்: ஓங்கார சக்தியம்மா
ஒய்யாரி வாருமம்மா
குழு: ஓங்கார சக்தியம்மா
ஒய்யாரி வாருமம்மா

ஆண்: ஓங்கார சக்தியம்மா
ஒய்யாரி வாருமம்மா
குழு: ஓங்கார சக்தியம்மா
ஒய்யாரி வாருமம்மா

ஆண்: ஆங்காரா சக்தியம்மா
அங்காள சக்தியம்மா
குழு: ஆங்காரா சக்தியம்மா
அங்காள சக்தியம்மா

ஆண்: ஓங்கார சக்தியம்மா
ஒய்யாரி வாருமம்மா
குழு: ஓங்கார சக்தியம்மா
ஒய்யாரி வாருமம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *