Uyire Un Uyirena Song Lyrics in Tamil from Zero Movie. Uyire Un Uyirena Naan Iruppen Song Lyrics Penned in Tamil by Kabilan.
படத்தின் பெயர்: | ஜீரோ |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | உயிரே உன் உயிரென |
இசையமைப்பாளர்: | நிவாஸ் K.பிரசன்னா |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | அனிருத் ரவிச்சந்தர் |
பாடல் வரிகள்:
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப்
பாத்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாள் ஒரு விதையென
நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென
முதல் எது முடிவெது
எதுவரை இருப்போம்
அதுவரை பிறப்போம்
யார் நீ யார் நான்
நான் நீ நீ நான்
உலகின் கதவை
தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய்
மகிழ்ந்திருப்போம்
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென
நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப்
பாத்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாள் ஒரு விதையென
நான் எழுந்தேன்
ஆ ஆஹா அன்பே
ஆ ஆஹா
சிறுகுறிப்பு:
ஜீரோ என்பது 2016-ல் தமிழில் வெளியான கற்பனை கலந்த திகில் படம் ஆகும். இதனை சிவ் மோஹா இயக்கியுள்ளார். இதில் அஸ்வின் காகுமானு, ஷிவாடா, ரவி ராகவேந்திரா, JD சக்கரவர்த்தி, துளசி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு கபிலன், மதன் கார்க்கி, டைலர் டோன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும் அறிய