Vaadi En Thanga Sela Song Lyrics in Tamil from Kaala Movie. Vaadi En Thanga Sela Song Lyrics penned in Tamil by Arunraja Kamaraj.
படத்தின் பெயர்: | காலா |
---|---|
வருடம்: | 2018 |
பாடலின் பெயர்: | வாடி என் தங்க சில |
இசையமைப்பாளர்: | சந்தோஷ் நாராயணன் |
பாடலாசிரியர்: | அருண்ராஜா காமராஜ் |
பாடகர்கள்: | சங்கர் மகாதேவன், பிரதீப் குமார், ஆனந்த் |
பாடல் வரிகள்:
வாடி என் தங்க சில
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல
அடி வாடி என் தங்க சில
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல
என் ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும் வாழ்க்கையில
ஒத்த தலை ராவணன்
பச்சபுள்ள ஆவுறேன்
கக்கத்துல தூக்கிக்க வரியா
பட்டகத்தி வீசுனேன்
பட்டாம் பூச்சி ஆக்கின
முட்டகன்னி மயக்குன சரியா
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா
திருப்பி போட்டு வாங்கு
வாடி என் தங்க சில
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல
என் ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும் வாழ்க்கையில
நெத்திப் பொட்டு மத்தியில
என்ன தொட்டு வச்சவளே
நீ மஞ்ச பூசி முன்ன வந்தா
கண்ணு கூசுமடி
பேட்டைக்குள்ள பொல்லாதவன்
ஏய் பேட்டைக்குள்ள பொல்லாதவன்
நீ போட்ட கோட்ட தாண்டாதவன்
என் வீரத்தை எல்லாம் மூட்டையா கட்டி
உன் பின்னாடி தள்ளாடி வந்தேனடி ஓ
சோகத்தெல்லாம் மூட்ட கட்டி
கொண்டாட பொண்டாட்டி வந்தாயடி
ஓ வாடி என் தங்க சில
வாடி என் தங்க சில
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல
என் ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும் வாழ்க்கையில
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
திருப்பி திருப்பி திருப்பி
அன்பு கொட்ட நட்பு உண்டு
பாசம் கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதுமில்ல
ஊரே சொந்தமடா
சேட்டை எல்லாம் செய்யாதவன்
சேட்டை எல்லாம் செய்யாதவன்
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன்
நீ வீட்டை எல்லாம் ஆளுற அழகில
பெண்ணே நான் திண்டாடி போனேனடி
ஏய் கோட்டை எல்லாம்
ஆளுற வயசுல
கண்ணே உன் கண்ஜாடை
போதுமடி வாடி
தொட்டா பறக்கும் தூளு
கண்ணு பட்டா கலக்கும் பாரு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா தில்லா தில்லா
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
சிறுகுறிப்பு:
காலா என்பது 2018-ல் வெளியான பா.ரஞ்சித்-ஆல் எழுதி இயக்கப்பட்ட சண்டை படமாகும். இதில் ரஜினிகாந்த், சமுத்திர கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, நானா படேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை அருண்ராஜா காமராஜ், உமா தேவி, அறிவி முதலியோர் எழுதியுள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் அறிய