Enakkaga Poranthaye Song Lyrics in Tamil from Pannaiyarum Padminiyum Movie. Enakkaga Poranthaye Song Lyrics penned by Vaali.
படத்தின் பெயர்: | பண்ணையாரும் பத்மினியும் |
---|---|
வருடம்: | 2014 |
பாடலின் பெயர்: | எனக்காக பொறந்தாயே |
இசையமைப்பாளர்: | ஜஸ்டின் பிரபாகரன் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | SPB சரண், அனு ஆனந்த் |
பாடல் வரிகள்:
ஆண்: எனக்காக பொறந்தாயே
எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி
ஆண்: எனக்காக பொறந்தாயே
எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி
ஆண்: உனக்கு மாலையிட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
ஆண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன்
என்ன ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்
பெண்: உனக்காக பொறந்தேனே
எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா
பெண்: உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
பெண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன்
என்ன ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்
பெண்: ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சுல
பச்சைய குத்தி வச்சேன்
ஆண்: இதுதான்தி ரதம்
இதுல தான் நெதம்
உன்னதான் உட்கார வச்சி
நான் ராசாத்தி ராசா
நான் ஊர்கோலம் வந்திடுவேன்
பெண்: உன்னோடு நான் சேர
தின்னேனே மண் சோறு
நேந்துதான் சாமிக்கு
விட்டேனே வெள்ளாடு
ஆண்: ஆத்தோரம் காத்தாடும்
காத்தோடு நாத்தாடும்
ஆண்: நான் காத்தாட்டமா நாத்தாட்டமா
ஒன்னாகனும் நாளும்
பெண்: நீ மாலை இடும் வேலை எது
கேட்குது என் தோளு
பெண்: உனக்காக பொறந்தேனே
எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா
ஆண்: உனக்கு மாலையிட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
சிறுகுறிப்பு:
பண்ணையாரும் பத்மினியும்-ஆனது 2014-ல் வேவையான நகைச்சுவை நாடக திரைப்படமாகும். இதனை நாளைய இயக்குநர் போட்டியாளர் அருண் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய பிரகாஷ், துளசி, நீலிமா ராணி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வாலி, ஜஸ்டின் பிரபாகரன் இருவரும் இணைந்து பாடல் வரிகள் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் அறிய