தூதுவளை இலை அரைச்சி | Thoothuvalai Ilai Arachi Song Lyrics

Thoothuvalai Ilai Arachi Song Lyrics in Tamil from Thaai Manasu Movie. Thoothuvalai Ilai Arachi Song Lyrics penned in Tamil by Kasthuri Raja.

பாடல்:தூதுவளை இலை அரைச்சி
படம்:தாய் மனசு
வருடம்:1994
இசை:தேவா
வரிகள்:கஸ்தூரி ராஜா
பாடகர்:மனோ, S ஜனகி

Thoothuvalai Ilai Arachi Song Lyrics

பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா

பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா

பெண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா

பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமன தழுவி கட்டிக்கணும்

ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன்
மணிக்கணக்கா

ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா

ஆண்: நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
உனக்காக தான்
கண்ணே உனக்காக தான்

பெண்: நான் கூட மனசுக்குள்ள
ஆசை வளத்துகிட்டேன்
உன்னை பார்க்கத்தான்
மாமா உன்னை பார்க்கத்தான்

ஆண்: அட முத்துன கிறுக்கு
மொத்தமும் தெளிய முறையிடலமோ
பெண்: சுத்துற கண்ணுல
சிக்குன என்னை சிறையிடலாமோ

ஆண்: எத்தனை நாள்
இப்படி நான் ஏங்கிறது
பெண்: பொட்டு வைச்சு
பூ முடிக்கும் நாளிருக்கு

பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா

ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா

ஆண்: ஊர் தூங்கும் வேலையிலும்
நான் தூங்க போனதில்லை
உன்னால தான்
கண்ணே உன்னால தான்

பெண்: யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான்
நித்தம் உன் பேரு தான்

ஆண்: இத்தனை நனப்பு
என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ
பெண்: கட்டுப்பாடு இருந்தும்
கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ

ஆண்: முத்தமிட்டால்
மோசம் என்ன உண்டாகும்
பெண்: சத்தமிட்டால்
உன் நிலமை என்னாகும்

பெண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா

ஆண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா

பெண்: அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
ஆண்: அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
பெண்: நான் காத்தாகி ஊத்தாகி
மாமனே தழுவி கட்டிக்கணும்

ஆண்: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன்
மணிக்கணக்கா

பெண்: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *