Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Thedum Kan Paarvai Song Lyrics in Tamil Font

Mella Thirandhathu Kadhavu Movie Thedum Kan Paarvai Song Lyrics in Tamil Font. Thedum Kan Paarvai Song Tamil Lyrics Penned by Vaali.

படத்தின் பெயர்:மெல்ல திறந்தது கதவு
வருடம்:1986
பாடலின் பெயர்:குழலூதும் கண்ணனுக்கு
இசையமைப்பாளர்:எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாடல் வரிகள்:

ஆண்: தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ ஓ

பெண்: தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

ஆண்: தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க

ஆண்: காண வேண்டும் சீக்கிரம்
என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ
என் ஆசை காவியம்

பெண்: வாழும் காலம் ஆயிரம்
நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள்
என் பாட்டில் சொல்லவா

ஆண்: கனிவாய் மலரே
உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா

பெண்: தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்

ஆண்: தேடி தேடி பார்க்கிறேன்
என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில்
என் ஆவல் தீருமோ

பெண்: காற்றில் ஆடும் தீபமோ
உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே
என் மேனி வண்ணமே

ஆண்: பிரிந்தோம் இணைவோம்
பெண்: இனி நீயும் நானும்
வாழ வேண்டும் வாசல் தேடி வா

ஆண்: தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
பெண்: தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
ஆண்: சொன்ன வார்த்தை
காற்றில் போகுமோ
பெண்: வெறும் மாயமாகுமோ

ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க
பெண்: துடிக்க

சிறிகுறிப்பு:

மெல்ல திறந்தது கதவு என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி இசை காதல் திரைப்படமாகும். இதில் மோகன், ராதா மற்றும் அமலா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ஆர்.சுந்தர்ராஜன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் 12 செப்டம்பர் 1986 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.