Mella Thirandhathu Kadhavu Movie Kuzhal Oothum Kannanukku Song Lyrics in Tamil. Kuzhal Oothum Kannanukku Song Tamil Lyrics penned by Vaali.
படத்தின் பெயர்: | மெல்ல திறந்தது கதவு |
---|---|
வருடம்: | 1986 |
பாடலின் பெயர்: | குழலூதும் கண்ணனுக்கு |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | கே.எஸ்.சித்ரா |
பாடல் வரிகள்:
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும்
தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும்
தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
மழைக்காத்து வீசுறபோது
மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது
வண்ண மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது
மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது
வண்ண மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு
என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்ன தான் கட்டி வைப்பேன்
சுகமான தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு
சரி ஜோடி நாமாச்சு கேளையா
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
கண்ணா உன் வாலிப நெஞ்சை
என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை
என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான்
போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான்
ராவானா தேடுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா
இளநெஞ்சம் படும் பாடு கேளையா
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க
குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும்
தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும்
தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
சிறிகுறிப்பு:
மெல்ல திறந்தது கதவு என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி இசை காதல் திரைப்படமாகும். இதில் மோகன், ராதா மற்றும் அமலா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ஆர்.சுந்தர்ராஜன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் 12 செப்டம்பர் 1986 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.