Siragugal Vanthathu Song Lyrics in Tamil

Siragugal Vanthathu Song Lyrics in Tamil from Sarvam Movie. Ulagam Oru Pulli Aguthe or Siragugal Vanthathu Song Lyrics penned by Pa.Vijay.

பாடல்:உலகம் ஒரு புள்ளி ஆகுது
படம்:சர்வம்
வருடம்:2009
இசை:யுவன் சங்கர் ராஜா
வரிகள்:பா.விஜய்
பாடகர்:ஜாவேத் அலி, மதுஸ்ரீ

Siragugal Vanthathu Song Lyrics in Tamil

ஆண்: சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது
கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது
உன்னை காணவே

ஆண்: கனவுகள் பொங்குது
எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது
உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

பெண்: உன்னை உன்னை
தாண்டி செல்ல
கொஞ்ச காலம்
கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

பெண்: உன்னை உன்னை
தேடி தானே
இந்த ஏக்கம்
இந்த பாதை
இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

ஆண்: கனவுகள் பொங்குது
எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது
உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

ஆண்: ஓ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா

பெண்: ஓ மழை இரவினில்
குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில்
கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

ஆண்: அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

பெண்: அன்பே எந்தன்
நெஞ்சம் எங்கே
பூவின் உள்ளே
நிலவின் மேலே
தீயின் கீழே
காற்றின் வெளியே இல்லையே

பெண்: உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில்
உந்தன் இரவில்
உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில்
உந்தன் உயிரில் உள்ளதே

ஆண்: ஓ எனக்கே நான்
சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தே
உனக்கு நான்
நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தேனே

பெண்: விழி நனைந்திடும்
நேரம் பார்த்து
இமை விலகிவிடாது
உயிர் துடித்திடும்
உன்னை எந்தன்
உயிர் ஒதுக்கிவிடாது

ஆண்: உலகம் ஒரு புள்ளி ஆகுது
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

ஆண்: சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது
கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது
உன்னை காணவே

ஆண்: ஒரு இமை எங்கிலும்
தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம்
வலியில் நோக
இடையினில் எப்படி
கனவும் காணுமோ

பெண்: உன்னை உன்னை
தாண்டி செல்ல
கொஞ்ச காலம்
கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட
என்னால் ஆகுமோ

பெண்: உன்னை உன்னை
தேடி தானே
இந்த ஏக்கம்
இந்த பாதை
இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *