Silendra Theepori Ondru Song Lyrics

Silendra Theepori Song Lyrics in Tamil from Thithikudhe Movie. Silendra Theepori Ondru Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:தித்திக்குதே
வருடம்:2003
பாடலின் பெயர்:சில்லென்ற தீப்பொறி
இசையமைப்பாளர்:வித்யாசாகர்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:சுஜாதா மோகன்

Silendra Theepori Ondru Song Lyrics

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென
சர சர சர வென
பரவுது நெஞ்சில் பார்த்தாயா

இதோ உன் காதலன் என்று
விறு விறு விறுவென
கல கல கலவென
அடி மன வெளிகளில்
ஒரு நொடி நகருது கேட்டாயா

உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான நான நா
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான நான நா

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென
சர சர சர வென
பரவுது நெஞ்சில் பார்த்தாயா

கண்ணா உன் காலணி உள்ளே
என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும்
கனவோடு நான் தொய்வதும்

கண்ணா உன் கால் உறை உள்ளே
என் கைகள் நான் தொய்ப்பதும்
உள்ளுற தேன் பாய்வதும்
உயிரோடு நான் தேய்வதும்

முத்து பையன் தேநீர் உண்டு
மிச்சம் வைத்த கோப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது
தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே முகாமிடும்
கோபங்களும் ஓ

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

அன்பே உன் புன்னகை கண்டு
எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்

நீ வாழும் அறைதனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்

அக்கம் பக்கம் நோட்டம் விட்டு
ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓ

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான நான நா
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே நா நான நான நான நா

Short Info

தித்திக்குதே என்பது பிருந்தா சாரதி இயக்கி 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் நாடக திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஜீவா, ஸ்ரீதேவி விஜய்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இசையை வித்யாசாகர் இசையமைத்தார். இப்படம் ஆகஸ்ட் 1, 2003 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் 2001 தெலுங்கு திரைப்படமான மனசந்த நுவே-வின் தமிழ் மறுஉருவாக்கம் ஆகும். மேலும் இப்படம் அக்னி பிரேம் என்று இந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *