Jigiri Dosthu Song Lyrics in Tamil from Namma Veettu Pillai Movie. Jigiri Dosthu Song Lyrics has penned in Tamil by Arunraja Kamaraj.
படத்தின் பெயர்: | நம்ம வீட்டுப் பிள்ளை |
---|---|
வருடம்: | 2019 |
பாடலின் பெயர்: | ஜிகிரி தோஸ்து |
இசையமைப்பாளர்: | D.இமான் |
பாடலாசிரியர்: | அருண்ராஜா காமராஜ் |
பாடகர்கள்: | ஜெயமூர்த்தி, அந்தக்குடி இளையராஜா |
பாடல் வரிகள்:
கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீ பொறிக்க தோள் குடுக்கும்
பந்தம் இதுதானா
ஒண்ணா மன்னா
ஒண்ணா நின்னா
பிரச்னை பறக்கும் தானா
தேடி வந்த சாமி தானா
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேத்து சுமக்கும் தோஸ்து
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேத்து சுமக்கும் தோஸ்து
கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீ பொறிக்க தோள் குடுக்கும்
பந்தம் இதுதானா
ஒண்ணா மன்னா
ஒண்ணா நின்னா
பிரச்னை பறக்கும் தானா
தேடி வந்த சாமி தானா
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேத்து சுமக்கும் தோஸ்து
ஹே கட்டாந்தரையில
கொட்டா நிழலுல
முட்டி திரியுற காளை
எட்டா கனிகள எட்டி பரிச்சிட
முட்டு குடுக்கணும் தோழ
வாழும் காலம் எல்லாம்
அவன் தானே எல்லாம்
என்ன வந்தாலும் ஏத்துக்கடா
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேத்து சுமக்கும் தோஸ்து
மாமா வா மாப்பிள்ளை
அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல
ஆனா நமக்குள்ள அந்த
அன்புக்கு எல்லையே இல்ல
தங்கத்த போல் ஒரு மனசோட
ரெண்டு சிங்கத்த போல நடப்போம்
எப்பவும் தனக்கென வாழாம
ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்
நம்மோட சுவாசம்
நின்னாலும் பாசம்
மறந்திட பழகழையே
வட்டிக்கட போல
குட்டி போட்டு கூட
வளந்திட தடை இல்லையே
உன்னோட சங்காத்தம் எப்போதுமே
அடி நெஞ்சில் குறிப்பாட்டம் தான் தங்குமே
இன்னால போலத்தான் எந்நாளுமே
புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே
பெத்தவன் பேச்சையும்
மத்தவன் பேச்சையும்
மண்டையில் ஏத்தினது இல்ல
நட்புக்கு மத்தியில்
நிக்குற யாரையும்
சுத்தமா சீண்டனது இல்ல
இல்ல இல்ல இல்ல இல்ல
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேத்து சுமக்கும் தோஸ்து
கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீ பொறிக்க தோள் குடுக்கும்
பந்தம் இதுதானா
ஒண்ணா மன்னா
ஒண்ணா நின்னா
பிரச்னை பறக்கும் தானா
தேடி வந்த சாமி தானா
ஹே கட்டாந்தரையில
கொட்டா நிழலுல
முட்டி திரியுற காளை
எட்டா கனிகள
எட்டி பரிச்சிட
முட்டு குடுக்கனும் தோழ
வாழும் காலம் எல்லாம்
அவன் தானே எல்லாம்
என்ன வந்தாலும் ஏத்துக்கடா
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேத்து சுமக்கும் தோஸ்து
ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து
கனவ சேத்து சுமக்கும் தோஸ்து
சிறுகுறிப்பு:
நம்ம வீட்டு பிள்ளை என்பது 2019-ல் வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி அதிரடி நாடகப் படம். இதனை இயக்குனர் பண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் அனு இம்மானுவேல், சமுத்திரகனி, சூரி, பாரதிராஜா மற்றும் நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை டி.இம்மான் இசையமைத்தார். இதன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே நீரவ் ஷா மற்றும் ரூபன் ஆகியோரால் கையாளப்பட்டது. இந்த படம் செப்டம்பர் 27, 2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய