Pura Pura Pen Pura Song Lyrics in Tamil from Hero Old Movie. Pura Pura Pen Pura Song Lyrics sung by K.S.Chithra and S.P.B.
படத்தின் பெயர்: | ஹீரோ |
---|---|
வருடம்: | – |
பாடலின் பெயர்: | புறா புறா பெண் புறா |
இசையமைப்பாளர்: | – |
பாடலாசிரியர்: | – |
பாடகர்கள்: | K.S.சித்ரா, S.P.பாலசுப்ரமணியம் |
பாடல் வரிகள்:
பெண்: புறா புறா பெண் புறா
மடி கொடு மன்மதா
பெண்: மனம் தேடிய காதலன்
மலர் சூடிய வேளையில்
என் சோலையில்
பொன் வேளையில்
குயில் கூவியதே
பெண்: என் ராமன் நீதானே
உன் சீதை நானே
என் ராமன் நீதானே
உன் சீதை நானே
பெண்: புறா புறா பெண் புறா
மடி கொடு மன்மதா
பெண்: இன்று நேற்று
வந்த பந்தம் அல்ல
இது இரவில் தோன்றும்
வனவில்லும் அல்ல
ஆண்: காதல் உயிரில்
கலந்ததென்ன மெல்ல
நான் கவியும் அல்ல
மேலும் மேலும் சொல்ல
ஆண்: என் காதல் தேவன்
கண்டு கொண்ட நாள் இது
ஆண்: என் கனவில் கூட
ராஜராகம் கேட்குது
பெண்: மழையோ சுடுகின்றது
வெயிலோ குளிர்கிறது
ஆண்: தொடவும் விரல் படவும்
புது ஸ்ருதி ஏறியது
பெண்: என் ராமன் நீதானே
உன் சீதை நானே
என் ராமன் நீதானே
உன் சீதை நானே
ஆண்: புறா புறா பெண் புறா
பெண்: மடி கொடு மன்மதா
ஆண்: தொட்டு தொட்டு
கோடு தாண்ட வேண்டும்
உன் தொல்லை கூட
இன்பமாக வேண்டும்
பெண்: விட்டு விட்டு
காதல் செய்ய வேண்டும்
புது வீணை போல
என்னை மீட்ட வேண்டும்
ஆண்: கண்களை மூடி
கற்பனை கோடி காணலாம்
பெண்: கற்பனை மெல்ல
கட்டிலில் உண்மை ஆகலாம்
ஆண்: இவள் தேடிய காதலன்
இதழ் மேல் ஒரு பாடகன்
சரசம் புது சரசம் கொண்டு
உரசும் தலைவன்
பெண்: என் ராமன் நீதானே
உன் சீதை நானே
என் ராமன் நீதானே
உன் சீதை நானே