பாசம் வைக்க நேசம் வைக்க | Pasam Vaika Nesam Vaika Song Lyrics

Pasam Vaika Nesam Vaika Song Lyrics in Tamil from Thalapathi Movie. Pasam Vaika Nesam Vaika Song Lyrics penned in Tamil by Vaali.

பாடல்:பாசம் வைக்க நேசம் வைக்க
படம்:தளபதி
வருடம்:1991
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடகர்:KJ யேசுதாஸ்,
SP பாலசுப்ரமணியம்

Pasam Vaika Nesam Vaika Song Lyrics

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு
ஆடத்தான்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு
ஆடத்தான்

எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே ஹேய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு
ஆடத்தான்

போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா டோய்

பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா டோய்

ஊத காத்து வீச
உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சு காயலாம்

தை பொறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போலே
பாயலாம்

அச்சு வெல்லம் பச்சரிசி
வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள்தான்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு
ஆடத்தான்

எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு
ஆடத்தான்

பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நான் இல்லை

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே

உள்ளம் மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட
கற்பைப்போல எண்ணுவேன்

சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி
நாம் தான் ஹேய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு
ஆடத்தான்

எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே ஹேய்

காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு
ஆடத்தான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *