Hanuman Chalisa Lyrics in Tamil from Anjaneyar Songs. ஹனுமான் சாலிசா பாடல் வரிகள். Hanuman Chalisa Lyrics penned in Tamil by Senthilkumar.
Hanuman Chalisa Lyrics in Tamil
மாசற்ற மனத்துடனே
ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்திரனே வாங்கினேன்
வாயுபுத்திரனே வாங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஸ்ரீஹனுமானே
ஜெயஹனுமானே
ஞான கடலே
உலகத்தின் ஒளியே
உமக்கு வெற்றியே
ராமதூதனே
ஆற்றலின் வடிவமே
அஞ்சனை மைந்தனே
வாயுபுத்திரனே
மஹாவீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய்
நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில்
குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும்
கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல்
அணி செய்ய
இடியும் கொடியும்
கரங்களில் தவழ
சிவனின் அம்சமே
கேசரி மைந்தனே
உன் பிரதாபமே
உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா
சாதுர்யம் நிறைந்தவா
ராமா சேவையே
சுவாசமானவா
உன் மனக் கோவிலில்
ராமனின் வாசம்
ராமனின் புகழை
கேட்பது பரவசம்
ராம லஷ்மண ஜனகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ராம லஷ்மண ஜனகி
ஸ்ரீராம தூதனே மாருதி
உன் சிறுவடியை
சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயில்
லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த
பராக்கிரமே சாலியே
ராமனின் பணியை
முடித்த மாருதியே
ராமனின் அணைப்பில்
ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை
காத்த சஞ்சீவி
உனது பெருமையை
ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே
உன்னை வைத்தான்
ஆயிரம் தலைகொண்ட
சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன்
ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும்
ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை
ஆதிசேஷனும்
எம குபேர
திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை
சொல்ல முடியுமோ
சுக்ரீவனை
ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை
அவன் பெற செய்தாய்
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
இலங்கையின் மன்னன்
விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே
உன் அருளாலே
கதிரவனை கண்ட
கவி வேந்தனே
கனியென விழுங்கிய
ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம்
தாங்கியே சென்றாய்
கடலை கடந்து
ஆற்றலை காட்டினாய்
உன்னருளால்
முடியாதது உண்டோ
மலையும் கடுகென
மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின்
காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு
எளியவன் நீயே
சரண் அடைந்தாலே
ஓடியே வருவாய்
கண் இமை போல
காத்தே அருள்வாய்
உனது வல்லமை
சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும்
ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம்
ஒன்றே போதும்
தீய சக்திகள்
பறந்தே போகும்
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ஹனுமனின் ஜபமே
பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே
இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும்
உந்தன் வசமே
உன்னை நினைத்திட
எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில்
ராம நாமமே
ராமனின் பாதமே
உந்தன் இடமே
அடியவர் நிறைவே
கற்பகத் தருவே
இறையனுபூதியை
தந்திடும் திருவே
நான்கு யுகங்களும்
உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில்
உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில்
உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள்
உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி
நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி
தந்தாள் வரமே
ராம பக்தியின்
சாரம் நீயே
எண்ணம் எல்லாமே
ராமன் சேவையே
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ஹனுமனைத் துதித்தால்
ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து
பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே
வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில்
அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில்
தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு
மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை
நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து
துலங்கிட வருவாய்
ஜெய ஜெய ஜெய
ஜெய ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே
ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா
அனுதினம் பாடிட
பரமன் வருவான்
ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும்
அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை
எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில்
ஹனுமனின் அருளே
துளசிதாஸனின்
பிரார்த்தனை இதுவே
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ராம லக்ஷ்மண ஜானகி
ஸ்ரீராம தூதனே மாருதி
ஸ்ரீராம தூதனே மாருதி
ஸ்ரீராம தூதனே மாருதி