Partha Mudhal Naale Song Lyrics in Tamil from Vettaiyaadu Vilaiyaadu Movie. Partha Mudhal Naale or Kan Parthu Kathaikka Song Lyrics in Tamil.
பாடல்: | பார்த்த முதல் நாளே |
---|---|
படம்: | வேட்டையாடு விளையாடு |
வருடம்: | 2006 |
இசை: | ஹாரிஸ் ஜெயராஜ் |
வரிகள்: | தாமரை |
பாடகர்: | பாம்பாய் ஜெயஸ்ரீ, உன்னி மேனன் |
Partha Mudhal Naale Lyrics in Tamil
பெண்: பார்த்த முதல் நாளே
உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
பெண்: ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய்
கடலாய் மாறி பின்
எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே
ஆண்: காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
ஆண்: உன் விழியில்
வழியும் பிரியங்களை
பார்த்தேன் கடந்தேன்
பகல் இரவை
உன் அலாதி அன்பினில்
நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்
பெண்: காலை எழுந்ததும்
என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில்
கண் பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே
ஆண்: என்னைப் பற்றி எனக்கே
தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டுமென்று தவிப்பேன்
பெண்: போகின்றேன் என நீ
பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று
உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
ஆண்: காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
பெண்: ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய்
கடலாய் மாறி பின்
எனை இழுத்தாய்
ஆண்: உன் அலாதி அன்பினில்
நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்
ஆண்: உன்னை மறந்து நீ
தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான்
உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்
பெண்: யாரும் மானிடரே
இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே
வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
ஆண்: கண் பார்த்து கதைக்க
முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
பெண்: பார்த்த முதல் நாளே
உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
பெண்: ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய்
கடலாய் மாறி பின்
எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய
உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே
Kan Parthu Kathaikka Song Lyrics
Female: Partha Mudhal Naale
Unnai Partha Mudhal Naale
Katchi Pizhai Pole
Unarndhen Katchi Pizhai Pole
Female: or Alaiyaai Vandhu Enai Adithaai
Kadalaai Maari Pin Enai Izhuthaai
En Padhaagai Thaangiya
Un Mugam Un Mugam
Endrum Maraiyathe
Male: Kaatti Kodukkirathe
Kanne Kaatti Kodukkirathe
Kadhal Vazhigirathe
Kannil Kadhal Vazhigirathe
Male: Un Vizhiyil Vazhiyum Piriyangalai
Parthen Kadandhen Pagal Iravai
Un Alaadhi Anbinil
Nanaindha Pin Nanaindha Pin
Naanum Mazhai Aanen
Female: Kaalai Ezhundhadhum
En Kangal Mudhalil
Thedi Pidippadhundhan Mugame
Thookkam Varugaiyil
Kan Paarkkum Kadaisi
Katchikkul Nirppadhum Un Mugame
Male: Enai Pattri Enakke
Theriyadha Palavum
Nee Arindhu Nadappathai Viyappen
Unai Yedhum Ketkaamal
Unadhaasai Anaithum
Niraivetra Vendum Endru Thavippen
Female: Pogindren Ena Nee
Pala Nooru Muraigal
Vidai Pettrum Pogaamal Iruppaai
Sari Endru Sari Endru Unai Poga Solli
Kadhavoram Naanum Nirka Sirippaai
Kadhavoram Naanum Nirka Sirippaai
Male: Kaatti Kodukkirathe
Kanne Kaatti Kodukkirathe
Kadhal Vazhigirathe
Kannil Kadhal Vazhigirathe
Female: or Alaiyaai Vandhu Enai Adithaai
Kadalaai Maari Pin Enai Izhuthaai
Male: Un Alaadhi Anbinil
Nanaindha Pin Nanaindha Pin
Naanum Mazhai Aanen
Male: Unnai Marandhu Nee
Thookkathil Sirithaai
Thoongaamal Adhai Kandu Rasithen
Thookkam Marandhu Naan
Unai Parkkum Kaatchi
Kanavaga Vanthadhendru Ninaithen
Female: Yaarum Maanidare
Illaadha Idathil
Siru Veedu Katti Kolla Thondrum
Neeyum Naanum
Ange Vazhgindra Vazhvai
Maram Thorum Sedhukkida Vendum
Male: Kan Paarthu Kadhaikka
Mudiyaamal Naanum
Thavikindra Oru Pennum Neethaan
Kan Kotta Mudiyaamal
Mudiyaamal Paarkum
Salikkaadha Oru Pennum Neethaan
Salikkaadha Oru Pennum Neethaan
Female: Partha Mudhal Naale
Unnai Aartha Mudhal Naale
Kaatchi Pizhai Pole
Unarndhen Kaatchi Pizhai Pole
Female: or Alaiyaai Vandhu Enai Adithaai
Kadalaai Maari Pin Enai Izhuthaai
En Padhaagai Thaangiya
Un Mugam Un Mugam
Endrum Maraiyaathe