Ondra Renda Aasaigal Song Lyrics in Tamil from Kaakha Kaakha Movie. Ondra Renda Aasaigal Song Lyrics has penned in Tamil by Thamarai.
பாடல்: | ஒன்றா ரெண்டா ஆசைகள் |
---|---|
படம்: | காக்க காக்க |
வருடம்: | 2003 |
இசை: | ஹரிஸ் ஜெயராஜ் |
வரிகள்: | தாமரை |
பாடகர்: | பாம்பே ஜெயஸ்ரீ |
Ondra Renda Aasaigal Song Lyrics in Tamil
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
என் கனவில் ஆஹா
நான் கண்ட ஆஹா
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆஹா
பல கதைகள் ஆஹா
பேசிடலாம் கலாபக்காதலா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
பெண்களை நிமிர்ந்து பார்த்திட
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேரா பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடல் ஒன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும்
உந்தன் முகம்
மரணம் வரையில்
என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில்
எனது கனவினை
காண போகிறேன்
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே
ஓர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
சந்தியாக் கால மேகங்கள்
உன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில்
ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற
எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே தோன்றுதே
அன்பே இரவை கேட்கலாம்
இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும்
இரவே நீளுமா
இரவே நீளுமா
என் கனவில் ஆஹா
நான் கண்ட ஆஹா
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆஹா
பல கதைகள் ஆஹா
பேசிடலாம் கலாபக்காதலா