Oxygen Thanthale Song Lyrics in Tamil from Kavan Movie. Oxygen Thanthale Song Lyrics has penned in Tamil by Kabilan Vairamuthu.
படத்தின் பெயர் | கவண் |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | ஆக்சிஜன் தந்தாயே |
இசையமைப்பாளர் | ஹிப் ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | கபிலன் வைரமுத்து |
பாடகர்கள் | ஹிப் ஹாப் தமிழா, சுதர்சன் அசோக் |
பாடல் வரிகள்:
ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே
ஓடும் நதியில் இலையைப் போலே
நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ
சூடாய் பொழிகிறதே
கலாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்
ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே
போனாய் எதனாலே போனாய் எதனாலே
எதனாலே ஓஹோ ஹ்ம்ம்
உலா உலா கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததாய்
சேலை சிண்ட்ரெல்லா
வெட்டவெளி வானம் எங்கும்
வட்டமுகம் கண்டேன் கண்டேன்
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம் இடும் காதல் கொண்டேன்
காலம் அது தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்
ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது
எடை இல்லா பொருளல்ல அடி காதல் மனது
அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு
ஆளற்ற அறையில் கூட
அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை
மீண்டும் ஒரு காதல் செய்ய
கண்களில் ஈரம் இல்லை
ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே
ஓடும் நதியில் இலையைப் போலே
நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின்
ஒளியோ சூடாய் பொழிகிறதே
கலாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்