Othaiyila Ulagam Song Lyrics in Tamil from Endrendrum Punnagai Movie. Othaiyila Ulagam Maranthu Pochu Song Lyrics penned in Tamil by Kabilan
படத்தின் பெயர்: | என்றென்றும் புன்னகை |
---|---|
வருடம்: | 2013 |
பாடலின் பெயர்: | ஒத்தையில உலகம் |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | கபிலன் |
பாடகர்கள்: | திப்பு, அபாய் ஜோத்புர்கர் |
பாடல் வரிகள்:
ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே
உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே
உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
அரட்டைகள் அடித்தோமே
குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே
இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக
இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே
கண்ணீரை யார் அதை அறிவாரோ
அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள் ஆனேன்
நட்பு என்ன நடிப்போ
நமக்கென இருந்தோமே
தினசரி பிறந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காட்டினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு
பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே
நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்
ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே
உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
சிறுகுறிப்பு:
என்றென்றும் புன்னகை என்பது 2013-ல் வெளியான இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவை நாடக படம். இதனை I.அஹ்மத் எழுதி இயக்கியுள்ளார். இதில் ஜீவா, த்ரிஷா, வினய், சந்தானம், ஆண்ட்ரியா மற்றும் நாசர் ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க R.மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் டிசம்பர் 20, 2013 அன்று வெளியானது. மேலும் அறிய