Oru Nanban Irundhal Song Lyrics from Enakku 20 Unakku 18 Tamil Movie. Oru Nanban Irundhal Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.
படத்தின் பெயர்: | எனக்கு 20 உனக்கு 18 |
---|---|
வருடம்: | 2003 |
பாடலின் பெயர்: | ஒரு நண்பன் இருந்தால் |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | சின்மயீ, வெங்கட் பிரபு, SPB சரண் |
பாடல் வரிகள்:
பெண்: ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
ஆண்: கையோடு பூமியை சுமந்திடலாம்
பெண்: தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
ஆண்: நம் பேரில் திசைகளை எழுதலாம்
பெண்: கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
ஆண்: நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி
பெண்: இந்த உலகில் மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன் ஹேய்
இருவரும்: ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
இருவரும்: தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்
ஆண்: தோள் மீது கை
போட்டுக் கொண்டு தோன்றிய
எல்லாம் பேசி ஊரை சுற்றி
வந்தோம் வந்தோம்
ஆண்: ஒருவர் வீட்டிலே
படுத்து தூங்கினோம்
நட்பின் போர்வைக்குள்ளே
பெண்: இந்த காதல் கூட
வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே
இருவரும்: தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு
பெண்: ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
ஆண்: கையோடு பூமியை சுமந்திடலாம்
பெண்: தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
ஆண்: நம் பேரில் திசைகளை எழுதலாம்
ஆண்: நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல
நண்பன் ஒரே சொந்தம்
ஆண்: நமது மேஜையில்
உணவு கூட்டணி
அதில் நட்பின் ருசி
பெண்: அட வாழ்க்கை
பயணம் மாறலாம்
நட்பு தான் மாறுமா
ஆண்: ஆயுள் காலம்
தேர்ந்த நாளில்
இருவரும்: நண்பன் முகம் தான்
மறக்காதே
இருவரும்: ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
இருவரும்: தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே
நம் பேரில் திசைகளை எழுதலாம்
இருவரும்: நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி
இந்த உலகில் மிக பெரும் ஏணி
நண்பன் இல்லாதவன்
சிறு குறிப்பு:
2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படம் எனக்கு 20 உங்களுக்கு 18 ஆகும். இதனை ஜனோதி கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் தருண் குமார், த்ரிஷா, ஸ்ரியா சரண், விவேக் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் மூலம் த்ரிஷா தெலுங்கு அறிமுகத்தையும், ஸ்ரீ சரனின் தமிழ் அறிமுகத்தையும் பெற்றனர். மேலும் அறிய