Thola Thola Song Lyrics in Tamil

Thola Thola Song Lyrics from Pandavar Bhoomi Tamil Movie. Thozha Thozha Song Lyrics. Thola Thola Song Lyrics penned in Tamil by Snehan.

படத்தின் பெயர்:பாண்டவர் பூமி
வருடம்:2001
பாடலின் பெயர்:தோழா தோழா
இசையமைப்பாளர்:பரத்வாஜ்
பாடலாசிரியர்:சினேகன்
பாடகர்கள்:சித்ரா சிவராமன்,
யுகேந்திரன்

பாடல் வரிகள்:

பெண்: தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கனும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கனும்
உன்ன நான் புரிஞ்சுக்கனும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கனும்

பெண்: ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும்
தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

பெண்: நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது

பெண்: நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா

ஆண்: காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை

பெண்: நீயும் நானும் பழகுறோமே
காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா

பெண்: தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கனும்

ஆண்: நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி

ஆண்: புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே

பெண்: பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்தபின் ரணமாய் கொல்லும்

ஆண்: ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்

பெண்: தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கனும்
நட்ப பத்தி நாமும் பேசி தீர்த்துக்கனும்

ஆண்: உன்ன நான் புரிஞ்சுக்கனும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கனும்

பெண்: ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
கலங்கப்படாம பார்த்துக்கலாம்

சிறுகுறிப்பு:

பாண்டவர் பூமி என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இது சேரன் எழுதி இயக்கியது. இப்படத்தில் அருண் விஜய், ஷமிதா, ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் வினு சக்ரவர்த்தி, முகேஷ் திவாரி, சந்திரசேகர், ரஞ்சித், மனோரமா மற்றும் சார்ல் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ் பிலிம்பேர் விருதை வென்றது. மேலும் அறிய.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *