Nilave Vaan Nilave Song Lyrics in Tamil

Nilave Vaan Nilave Song Lyrics in Tamil from Maayi Movie. Nilave Vaan Nilave Song Lyrics has penned in Tamil by Ilayakambam.

படத்தின் பெயர்:மாயி
வருடம்:2000
பாடலின் பெயர்:நிலவே வான் நிலவே
இசையமைப்பாளர்:SA ராஜ்குமார்
பாடலாசிரியர்:இளயகம்பம்
பாடகர்கள்:சுஜாதா

பாடல் வரிகள்:

நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு
கண்ணன் காலடியே ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே ராதை இவள்
வாழ்க்கை என்று கூறு

பெண் உள்ளம் என்வென்று
அறியாதவனோ
பேதை மனம் படும் பாட்டை
புரியாதவனோ

அந்த காற்றும் ஒரு நாள்
இன்னிசை பாடனும்
கண்ணா என் கண்ணா

நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு

மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்
பாலகன் வருவான் தேனோட
ஆண்டாள் நெஞ்சில் தேனோட
அழகர் வந்தாரே நீராட

வானமழை இல்ல என்றால்
வைகை நதி எது
வைகை நதி இல்லையென்றால்
சோலை மலர் ஏது

கண்களை மூடி கொண்டால்
வெளிச்சம் இருக்காது
தீ நடுவில் நீயே நின்றால்
தீர்வு கிடைக்காது

சூரியன் உதிப்பதை நிறுத்தித்கொண்டால்
உலகில் விடிவேது
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்
உயிர்கள் கிடையாது

உடலை தள்ளி உயிர் போனால்
என்ன செய்வது

நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு

உன்பேரை எந்தன் மூச்சில்
எழுதி வச்சேன் பாரு
அழிக்கும் நிலை வந்தால்
எனக்கு ஆயுள் இருக்காது

கடலுக்கு சொந்தமென்று
கரை இருக்கு பாரு
கன்னிமகள் சொந்தம் கொள்ள
உன்னயின்றி யாரு

இன்னொரு தாயாயை நானும் மாறி
உன்னை தாங்கிடுவேன்
உன்னிழலாக வாழ்ந்திடகோடி
ஜென்மம் வாங்கிடுவேன்

கண்ணன் வாழ்ந்த கால் தடமா
மண்ணில் வாழ்கிறேன்

நிலவே வான் நிலவே வான் நிலவே
வார்த்தை ஒன்றை பேசு
கண்ணன் காலடியே ராதை இவள்
வாழ்கை என்று கூறு

பெண் உள்ளம் என்வென்று
அறியாதவனோ
பேதை மனம் படும் பாட்டை
புரியாதவனோ

அந்த காற்றும் ஒரு நாள்
இன்னிசை மாறனும்
கண்ணா என் கண்ணா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *