Marupadiyum Serial Title Song Lyrics in Tamil

Colors Tamil TV Marupadiyum Serial Title Song Lyrics in Tamil Font. Tamil Dubbed Serial Marupadiyum Title Song Lyrics in Tamil Font.

பாடல் வரிகள்:

ஆண்: தினம் உன்னை
நினைவில் கொண்டேனடி
மனம் நிறைந்திட வந்தாயடி
சொல்லாத ஆசை மீண்டும்
என்னை வாட்டுதே
வார்த்தைகள் சிறை பூட்டுதே

ஆண்: நேசமே தொலையும் போதே
ஜீவன் பொய்ந்து போகுதே
கனவும் கண்ணை மூடுதே
உன்னை தேடுதே

ஆண்: மறுபடியும் மறுபடியும்
நெஞ்சம் அழுகிறதே
மறுபடியும் மறுபடியும்
நெஞ்சம் அழுகிறதே

பெண்: காதல் பாதை இருளில் மூட
கண்களில் என்றும் நீயட
தனிமை வாட்டும் நேரம்
எந்தன் அருகில் நின்றாயடா

பெண்: நீயின்றி நானுமே
நீரின்றி மேகமே
வேரின்றி பூக்களும் வாடுமே
சறுகாகி போகிறேன்
காற்றோடு தேய்கிறேன்
வலியை தாங்கி நான் வாழ்கிறேன்

பெண்: சுவாசமே காயும் போதே
புது ஈரம் பூக்குதே
ஆண்: கனவு கண்ணை மூடுதே
உன்னை தேடுதே

பெண்: மறுபடியும் மறுபடியும்
நெஞ்சம் அழுகிறதே
மறுபடியும் மறுபடியும்
நெஞ்சம் அழுகிறதே

ஆண்: காதல் பெருக்கோடும் ஓடை இங்கே
கானல் நீராயானது ஏனடி
பெண்: தனிமை வாட்டும் நேரம்
எந்தன் அருகில் நின்றாயடா

ஆண்: என்னுள்ளம் நீங்கியே
தூரங்கள் போகிறாய்
யார் செய்த தவறிதோ சொல்லு நீ
காற்றினில் ஆடிடும்
தீபத்தை போலவே
காதலும் ஆனதே கண்மணி

பெண்: நீயின்றி நானுமே
நீரின்றி மேகமே
வேரின்றி பூக்களும் வாடுமே
சறுகாகி போகிறேன்
காற்றோடு தேய்கிறேன்
வலியை தாங்கி நான் வாழ்கிறேன்

பெண்: சுவாசமே காயும் போதே
புது ஈரம் பூக்குதே
ஆண்: கனவு கண்ணை மூடுதே
உன்னை தேடுதே

ஆண்: காதல் பெருக்கோடும் ஓடை
இங்கே கானல் நீரானது ஏனடி
ஜீவன் நீயே போனபின்னே
வாழ்ந்து பயனென்னடி

ஆண்: என்னுள்ளம் நீங்கியே
தூரங்கள் போகிறாய்
யார் செய்த தவறிதோ சொல்லு நீ
காற்றினில் ஆடிடும்
தீபத்தை போலவே
காதலும் ஆனதே கண்மணி

ஆண்: நேசமே தொலையும் போதே
ஜீவன் பொய்ந்து போகுதே
கனவும் கண்ணை மூடுதே
உன்னை தேடுதே

ஆண்: மறுபடியும் மறுபடியும்
நெஞ்சம் அழுகிறதே
மறுபடியும் மறுபடியும்
நெஞ்சம் அழுகிறதே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *