Sun TV Kannana Kanne Serial Song Lyrics in Tamil. Kannana Kanne Serial Title Song Lyrics has penned in Tamil GKB and Sung by KS Chithra.
பாடல் வரிகள்
கண்ணான கண்ணாக ஆராரோ
நீ பாட வேண்டும்
வேற்யாரும் பார்க்காத பேரன்பை
நான் காண வேண்டும்
தாயப் போல உன்ன பாக்குறன்
நீ பாசம் வைக்க வேணும் ஏங்குறேன்
அப்பா உந்தன் அன்பை வேண்டியே
ஆசை கோடி நெஞ்சில் தாங்கினேன்
நித்தம் உன் மடியினில் கண் உறங்கிட
நான் ஏங்குகிறேன்
என் நிழல் என நீ உடன் வர
நான் ஏங்குகிறேன்
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
அப்பா எந்நாளும்
நான் உந்தன் கண்ணே
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
வெறுத்தாலும் மறுத்தாலும்
நான் உன் கண்ணே
உனதன்பை மனம் ஏங்கி
உயிர் தினம் துடிக்குது
விழியோரம் மழை வந்து
எனை தினம் நனைக்கிது
உலகில் உறவாய்
நீதான் என இருக்கிறேன்
ஒருநாள் உணர்வாய்
என்னை தினம் பொறுக்கிறேன்
அப்பா நீ என்னோடு
அன்பாகி போனால்
தெய்வங்கள் வேண்டாமே
என் வாழ்வில் வீணா
தாயும் நீயே தந்தை நீயே
நீ மட்டுமே என்னோடிரு
போதும் போதும்
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
அப்பா எந்நாளும்
நான் உந்தன் கண்ணே
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
வெறுத்தாலும் மறுத்தாலும்
நான் உன் கண்ணே