Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Mailanji Mailaanji Song Lyrics in Tamil from Namma Veettu Pillai Movie. Mailaanji Mailanji Song Lyrics has penned in Tamil by Yugabharathi.

படத்தின் பெயர்நம்ம வீட்டு பிள்ளை
வருடம்2019
பாடலின் பெயர்மயிலாஞ்சி
இசையமைப்பாளர்டி. இமான்
பாடலாசிரியர்யுகபாரதி
பாடகர்கள்பிரதீப் குமார், ஸ்ரேயா ஹோஷல்
பாடல் வரிகள்:

ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண்: கண்ணாடி போல காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்
ஆண்: கண்ணால நீயும் நூல விட்டு பாக்க
காத்தாடியாக நானும் சுத்துறேன்

பெண்: சதா சதா சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: ஆ… மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
ஆண்: கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே…

ஆண்: தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே…

பெண்: விளக்கும் கூட வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ…
ஆண்: கணக்கில்லாம வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ…

பெண்: அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல

ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண்: பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
ஆண்: வெள்ளாட்டு மேல பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்

பெண்: சதா சதா சந்தோஷமாகுறேன்
ஆண்: மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
பெண் : நூறாகுறேன்…

குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி

சிறுகுறிப்பு:

நம்ம வீட்டு பிள்ளை என்பது 2019-ல் வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி அதிரடி நாடகப் படம். இதனை இயக்குனர் பண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் அனு இம்மானுவேல், சமுத்திரகனி, சூரி, பாரதிராஜா மற்றும் நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை டி.இம்மான் இசையமைத்தார். இதன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே நீரவ் ஷா மற்றும் ரூபன் ஆகியோரால் கையாளப்பட்டது. இந்த படம் செப்டம்பர் 27, 2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.