Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Yenga Annan Song Lyrics from Namma Veettu Pillai Tamil Movie. Yenga Annan Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.

படத்தின் பெயர்நம்ம வீட்டு பிள்ளை
வருடம்2019
பாடலின் பெயர்எங்க அண்ணன்
இசையமைப்பாளர்டி. இமான்
பாடலாசிரியர்விக்னேஷ் சிவன்
பாடகர்கள்நகாஷ் அஜிஸ், சுனிதி சௌஹான்

பாடல் வரிகள்:

பெண்: வா வா டியர்ரு பிரதர்ரு
பார்த்தா செதறும் சுகரு
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி பவர்ரு

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

ஆண்: என் வீட்டு தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
அன்பான அருவி

குழு: என் தங்கை மை தங்கை
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க

ஆண்: என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
அணிலா இருப்பா
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா

பெண்: கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

ஆண்: அடுத்த ஜென்மம்கூட
அண்ணன் உனக்கு நான்தான்
அக்ரீமெண்ட போட்டு வச்சுக்கலாம்

பெண்: இந்த ஜென்மம் அண்ணன்
அடுத்த ஜென்மம் அப்பன்
மாத்தி மாத்தி பொறந்து வாழ்ந்துக்கலாம்

ஆண்: சொந்த பந்தம் பாசம் எல்லாம்
காணா போச்சு எங்கே
பெண்: பாசமலர் பார்ட் 2-வத்தான்
பாத்துகோங்க இங்க

ஆண்: கூட பொறந்தவ ஆசைபட்டா
பூமியகூட வாங்கித்தாடா
வாய் விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா
வேறொன்னும் வேணா போதும் போடா
கடவுள் வந்து கேட்டாக்கூட
உன்ன தரமாட்டேன்

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

குழு: என் தங்கை மை தங்கை
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க

பெண்: ஹே வா வா டியர்ரு பிரதர்ரு
குழு: பிரதர்ரு
பெண்: பார்த்தா செதறும் சுகரு
குழு: சுகரு
பெண்: அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி பவர்ரு

ஆண்: என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
அணிலா இருப்பா
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா

பெண்: கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

குழு: எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

பெண்: ஹா… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…

பெண்: அண்ணே
ஆண்: என்னடா தங்கை

சிறுகுறிப்பு:

நம்ம வீட்டு பிள்ளை என்பது 2019-ல் வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி அதிரடி நாடகப் படம். இதனை இயக்குனர் பண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் அனு இம்மானுவேல், சமுத்திரகனி, சூரி, பாரதிராஜா மற்றும் நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை டி.இம்மான் இசையமைத்தார். இதன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் முறையே நீரவ் ஷா மற்றும் ரூபன் ஆகியோரால் கையாளப்பட்டது. இந்த படம் செப்டம்பர் 27, 2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.