Engal Desam India Song Lyrics in Tamil from Vasanth TV. Engal Desam India Song Lyrics has sung in Tamil by SP Balasubrahmanyam.
பாடல் வரிகள்:
இந்தியா இந்தியா
இந்தியா இந்தியா
எங்கள் தேசம் இந்தியா
இந்தியா இந்தியா
எங்கள் தேசம் இந்தியா
வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா
இந்தியா… இந்தியா…
கோடுகளால் வரைகின்ற
தேசம் அல்ல இந்தியா
கொள்கைகளால் வரைகின்ற
தேசமடா இந்தியா
மூன்று பக்கம் கடல் கொண்ட
தேசம் அல்ல இந்தியா
நான்கு பக்கம் புகழ் கொண்ட
தேசமடா இந்தியா
வேறு வேறு மொழிகள் கூடி இங்கு
விரும்பி நின்ற போதிலும்
நூறு கோடி நாவில் பேசும்
நல்ல ஒற்றை வார்த்தை இந்தியா
இந்தியா இந்தியா
இந்தியா இந்தியா
மேற்கு நாடு வேட்டையாட
கல் எடுத்த காலையில்
கல்குடைந்து சிலை வடித்த
கலையின் தேசம் இந்தியா
ஏனை மக்கள் மொழி படைக்க
இதழ் குவித்த வேளையில்
வான் வரைக்கும் இலக்கு எங்கள்
வரைந்த தேசம் இந்தியா
காந்தி தேசம் இந்தியா
கட்கின் தேசம் இந்தியா
அக்னி தேசம் இந்தியா
அகிம்சை தேசம் இந்தியா
மானம் வீரம் கல்வி காத்த
ஞான பூமி இந்தியா
இமயமாக உயரமாக
எழுந்து நிற்கும் இந்தியா
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
நாளை அண்டம் ஆளும் இந்தியா
இந்தியா இந்தியா
இந்தியா இந்தியா
எங்கள் தேசம் இந்தியா
இந்தியா இந்தியா
எங்கள் தேசம் இந்தியா
வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
வசந்த தேசம் இந்தியா
இந்தியா… இந்தியா…
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்