Semmozhiyana Tamil Mozhi Song Lyrics

Semmozhiyana Tamil Mozhi Song Lyrics in Tamil from Semmozhi Manadu. Semmozhiyana Tamil Mozhi Song Lyrics has penned by Karunanidhi.

Semmozhiyana Tamil Mozhi Lyrics

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும் அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

ஓரறிவு முதல் ஆறறிவு
உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை
பகுத்துக் கூறும்

ஓரறிவு முதல் ஆறறிவு
உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை
பகுத்துக் கூறும்

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும் மேகலையும்
சிந்தாமணியுடனே
வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம்
கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

அகமென்றும் புறமென்றும்
வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது
இருக்கின்ற இனியமொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
ஓதி வளரும் உயிரான உலக மொழி
நம்மொழி நம் மொழி அதுவே

செம்மொழியான தமிழ் மொழியாம்
தமிழ் மொழி தமிழ் மொழி
தமிழ் மொழியாம்

செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்

தமிழ் மொழியாம்
எங்கள் தமிழ் மொழியாம்
தமிழ் மொழியாம்
எங்கள் தமிழ் மொழியாம்

வாழிய வாழியவே
வாழிய வாழியவே
வாழிய வாழியவே

வாழிய வாழியவே
வாழிய வாழியவே
வாழிய வாழியவே