Thirusenthoorin Kadalorathil Song Lyrics in Tamil from Deivam Movie. Thirusenthoorin Kadalorathil Song Lyrics penned in Tamil by Kannadasan.
பாடல்: | திருச்செந்தூரின் கடலொரத்தில் |
---|---|
படம்: | தெய்வம் |
வருடம்: | 1972 |
இசை: | குன்னக்குடி வைத்தியநாதன் |
வரிகள்: | கண்ணதாசன் |
பாடகர்: | TM சௌந்தராஜன், சீர்காழி கோவிந்தராஜன் |
Thirusenthoorin Kadalorathil Lyrics in Tamil
திருச்செந்தூரின் கடலொரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலொரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
அசுரரை வென்ற இடம்
அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம்
அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலொரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
கோவிலின் அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா கடல் அலையா
குழந்தைகள் பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன் கலையா
கோவிலின் அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா கடல் அலையா
குழந்தைகள் பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன் கலையா
மங்கையரின் குங்குமத்தை
காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளை
காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை
தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும்
வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா
ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
திருச்செந்தூரின் கடலொரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
பொன்னழகு மின்னி வரும்
வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளை
காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும்
வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளை
காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார்
நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார்
நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா