Varuvandi Tharuvandi Song Lyrics in Tamil

Varuvandi Tharuvandi Song Lyrics in Tamil from Deivam Movie. Varuvandi Tharuvandi Song Lyrics has penned in Tamil by Kannadasan.

பாடல்:வருவாண்டி தருவாண்டி
படம்:தெய்வம்
வருடம்:1972
இசை:குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்:கண்ணதாசன்
பாடகர்:சூலமங்கலம் ராஜலக்ஷ்மி,
MR விஜயா

Varuvandi Tharuvandi Lyrics in Tamil

வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி

வரம் வேண்டு வருவோர்க்கு
அருள்வாண்டி அவன்
வரம் வேண்டு வருவோர்க்கு
அருள்வாண்டி ஆண்டி

வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி
பழனி மலையாண்டி

சிவனாண்டி
மகனாகப் பிறந்தாண்டி
அந்த சிவனாண்டி
மகனாகப் பிறந்தாண்டி

அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தாண்டி
அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
என்றும் நடமாடும் துணையாக
அமைந்தாண்டி
என்றும் நடமாடும் துணையாக
அமைந்தாண்டி அவன் தாண்டி

வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி
சுவை பஞ்சாம்ருதம்
தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி
சுவை பஞ்சாம்ருதம்
தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
சொல்லி

வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப்புகழ்பாடி
வருவார்கள் கொண்டாடி
திருப்புகழ்பாடி
வருவார்கள் கொண்டாடி

வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி
பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *