Maruthamalai Mamaniye Song Lyrics in Tamil from Deivam Movie. Maruthamalai Mamaniye Song Lyrics has penned in Tamil by Kannadasan
பாடல்: | கோடி மலைகளிலே |
---|---|
படம்: | தெய்வம் |
வருடம்: | 1972 |
இசை: | குன்னக்குடி வைத்தியநாதன் |
வரிகள்: | கண்ணதாசன் |
பாடகர்: | மதுரை சோமு |
Maruthamalai Mamaniye Lyrics in Tamil
கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே
குளிர்ந்த மலை எந்தமலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்குமலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம்
தேடி வரும் மருதமலை ஆ
மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர
நான் வருவேன்
நாடியென் வினை தீர
நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை
மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட
வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை
மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட
வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே
அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே
அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம்
உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம்
எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம்
உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம்
எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
பனியது மழையது
நதியது கடலது
சகலமும் உனதொரு
கருணையில் எழுவது
பனியது மழையது
நதியது கடலது
சகலமும் உனதொரு
கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆ
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா