Vande Mataram Enbom Song Lyrics in Tamil

Vande Mataram Enbom Song Lyrics in Tamil from Patriotic Day Songs. Vande Mataram Enbom Song Lyrics has penned in Tamil by Bharathiyar.

Vande Mataram Enbom Lyrics in Tamil

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை
வணங்குதல் என்போம்
வந்தே மாதரம் என்போம்

ஜாதி மதங்களைப் பாரோம்
உயர் ஜன்மம்
இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே
அன்றி வேறு
குலத்தினராயினும் ஒன்றே

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை
வணங்குதல் என்போம்
வந்தே மாதரம் என்போம்

ஈனப் பறையர்களேனும்
அவர் எம்முடன்
வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ
சீனத்த ராய்விடு வாரோ
பிற தேசத்தர்
போற்பல தீங்கிழைப் பாரோ

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை
வணங்குதல் என்போம்
வந்தே மாதரம் என்போம்

ஆயிரம் உண்டிங்கு ஜாதி
எனில் அன்னியர் வந்து
புகல் என்ன நீதி
ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்
தம்முள் சண்டை செய்தாலும்
சகோதரர் அன்றோ

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை
வணங்குதல் என்போம்
வந்தே மாதரம் என்போம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தாற்பின்
நமக்கெது வேண்டும்

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை
வணங்குதல் என்போம்
வந்தே மாதரம் என்போம்

எப்பதம் வாய்த்திடு மேனும்
நம்மில் யாவர்க்கும்
அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்
வீழில் முப்பது கோடி
முழுமையும் வீழ்வோம்

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை
வணங்குதல் என்போம்
வந்தே மாதரம் என்போம்

புல்லடி மைத்தொழில் பேணிப்
பண்டு போயின நாட்களுக்கு
இனி மனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர
இந்தத் தொண்டு நிலைமையைத்
தூவென்று தள்ளி

வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத் தாயை
வணங்குதல் என்போம்
வந்தே மாதரம் என்போம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *