Avanithanile Piranthu Song Lyrics in Tamil

Avanithanile Piranthu Song Lyrics in Tamil from Murugan Thiruppugazh. Avanithanile Piranthu Song Lyrics penned in Tamil by Arunagirinathar.

Avanithanile Piranthu Lyrics in Tamil

அவனிதனிலே பிறந்து
மதலையெனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து
இளைஞோனாய்…

அருமழலையே மிகுந்து
குதலை மொழியே புகன்று
அதிவிதமதாய் வளர்ந்து
பதினாறாய்…

சிவகலைகள் ஆகமங்கள்
மிகவுமறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து
துதியாமல்…

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
வெகுகவலையாய் உழன்று
திரியும் அடியேன் உன்றன்
அடிசேராய்…

மவுன உபதேச சம்பு
மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த
மகாதேவர்…

மனமகிழவே அணைந்து
ஒரு புறமதாக வந்த
மலைமகள் குமாரதுங்க
வடிவேலா…

பவனிவரவே உகந்து
மயிலின்மிசையே திகழ்ந்து
படியதிரவே நடந்த
கழல்வீரா…

பரமபதமே செறிந்த
முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த
பெருமாளே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *