Velli Pani Malai Meethu Song Lyrics

Velli Pani Malai Meethu Song Lyrics in Tamil from Kappalottiya Thamizhan Movie. Velli Pani Malai Meethu Song Lyrics has penned by Bharathi.

படத்தின் பெயர்:கப்பலோட்டிய தமிழன்
வருடம்:1961
பாடலின் பெயர்:வெள்ளி பனிமலையின் மீது
இசையமைப்பாளர்:G ராமநாதன்
பாடலாசிரியர்:சுப்பிரமணிய பாரதி
பாடகர்கள்:சீர்காழி கோவிந்தராஜன்,
திருச்சி லோகநாதன்,
LR ஈஸ்வரி, ரோகினி

பாடல் வரிகள்

ஆண்: வெள்ளி பனிமலையின்
மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும்
கப்பல் விடுவோம்

குழு: வெள்ளி பனிமலையின்
மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும்
கப்பல் விடுவோம்

ஆண்: பள்ளி தளம் அனைத்தும்
கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும்
கோவில் செய்குவோம்

ஆண்: எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்

குழு: எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்

ஆண்: வெள்ளி பனிமலையின்
மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும்
கப்பல் விடுவோம்

ஆண்: முத்து குளிப்பதொரு
தென்கடலிலே
முத்து குளிப்பதொரு
தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல
நாட்டினர் வந்தே

ஆண்: முத்து குளிப்பதொரு
தென்கடலிலே
மொய்த்து வணிகர்
பல நாட்டினர் வந்தே

ஆண்: நாட்டி நமக்கினிய
பொருள் கொணர்ந்தே
நாட்டி நமக்கினிய
பொருள் கொணர்ந்தே

ஆண்: நம்மருள் வேண்டுவதும்
மேர்கரையிலே
முத்து குளிப்பதொரு
தென்கடலிலே

குழு: வெள்ளி பனிமலையின்
மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும்
கப்பல் விடுவோம்

ஆண்: பள்ளி தளம் அனைத்தும்
கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும்
கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்

குழு: எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்

ஆண்: ஆயுதம் செய்வோம்
நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம்
நல்ல காகிதம் செய்வோம்

ஆண்: ஆலைகள் வைப்போம்
கல்வி சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம்
கல்வி சாலைகள் வைப்போம்

ஆண்: ஓயுதல் செய்யோம்
தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம்
தலை சாயுதல் செய்யோம்

ஆண்: உண்மைகள் சொல்வோம்
பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம்
பல வண்மைகள் செய்வோம்

குழு: வெள்ளி பனிமலையின்
மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும்
கப்பல் விடுவோம்

ஆண்: பள்ளி தளம் அனைத்தும்
கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும்
கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்

குழு: எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று
தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *