Suriyane Kanna Song Lyrics in Tamil from Maayi Movie. Suriyane Kanna Thodachukka Suriyane Song Lyrics has penned in Tamil by Ravishankar.
படத்தின் பெயர்: | மாயி |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | சூரியனே கண்ண |
இசையமைப்பாளர்: | SA ராஜ்குமார் |
பாடலாசிரியர்: | ரவிசங்கர் |
பாடகர்கள்: | S ஜானகி |
பாடல் வரிகள்:
ஆ ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ
சூரியனே கண்ணத்
தொடச்சிக்க சூரியனே
தூரத்திலே ஏங்கி
தவிக்கிது தாய்மானமே
கள்ளமில்லாத பிள்ளை நிலா
அன்னையை தேடுது
குற்றமில்லாத பெற்ற மனம்
சோகத்தில் வாடுது
சூரியனே கண்ணத்
தொடச்சிக்க சூரியனே
விசமும் தாயின் கைபட
அமிர்தம் ஆகுமே
உன் தாயின் பாலில் விசமடா
என்ன செய்யுவேன்
அள்ளி எடுக்க ஆசைதான்
தீண்ட விதியில்லையே
முத்தம் கொடுக்க ஆசைதான்
யோகம் எனக்கில்லையே
நெஞ்சில தீயும் கண்ணுல நீரும்
அன்னை பெற்றவரமோ
சூரியனே கண்ணத்
தொடச்சிக்க சூரியனே
ஊருக்காக நதியுண்டு
நதிக்கு தாயில்ல
உயிருக்காக காற்றுண்டு
காற்றுக்கு தாயில்ல
மேகம் மழையா இறங்கிட்டா
மேகம் இருப்பதில்ல
சூடம் கொளுத்தி முடிஞ்சதும்
சூடம் இருப்பதில்ல
என்னுயிராக கண்மணி வாழ
உன்னில் கலர்ந்திருப்பேன்
சூரியனே கண்ணத்
தொடச்சிக்க சூரியனே
தூரத்திலே ஏங்கி
தவிக்கிது தாய்மானமே
கள்ளமில்லாத பிள்ளை நிலா
அன்னையை தேடுது
குற்றமில்லாத பெற்ற மனம்
சோகத்தில் வாடுது
சூரியனே கண்ணத்
தொடச்சிக்க சூரியனே