Parukulle Nalla Nadu Song Lyrics in Tamil

Mahakavi Bharathiyar’s Parukulle Nalla Nadu Song Lyrics in Tamil. Parukulle Nalla Nadu Song Lyrics has sung in Tamil by KS Chithra.

பாடல் வரிகள்:

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

ஞானத்திலே பர மோனத்திலே
உயர் மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு
இந்த பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு
தருவதிலே உயர் நாடு
இந்த பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

நன்மையிலே உடல் வன்மையிலே
செல்வப் பன்மையிலே மறத் தன்மையிலே
பொன்மயில் ஒத்திடு மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு
இந்த பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

யாகத்திலே தவவேகத்திலே
தனியோகத்திலே பலபோகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு
இந்த பாரத நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு

பாரத நாடு பாரத நாடு
பாரத நாடு பாரத நாடு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *