Chellatha Chella Mariyatha Song Lyrics in Tamil from Amman Songs. L.R Eswari’s Chellatha Chella Mariyatha Song Tamil Lyrics.
பாடல் வரிகள்
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து
அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா
அம்மா சொல்லடி நீயாத்தா
தாயே சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து
அரை வினாடி நில்லாத்தா
ஆசை தீர உன் அழகை
பார்த்து மாரியாத்தா
அந்த பாசத்தோடு வந்தேன் அடி
தாயே மாரியாத்தா
ஆசை தீர உன் அழகை
பார்த்து மாரியாத்தா
அந்த பாசத்தோடு வந்தேன் அடி
தாயே மாரியாத்தா
பொன்னும் பொருளும்
தந்தருள்வாய் கருமாரியாத்தா
பொன்னும் பொருளும்
தந்தருள்வாய் கருமாரியாத்தா
என்னை புகழோடு வைத்துடுவாய்
ஆதி சக்தி மாதா
என்னை புகழோடு வைத்துடுவாய்
ஆதி சக்தி மாதா
அம்மா அம்மா
தென்னமரத் தோப்பினிலே
தேங்காயப் பறிச்சிகிட்டு
தென்னமரத் தோப்பினிலே
தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம்
உந்தனையே சின்னாத்தா
நாங்கள் தேடி வந்தோம்
உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துகிட்டு
எங்க குறை கேட்டுபுட்டு
இளநீரை எடுத்துகிட்டு
எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு
கொடு மாரியாத்தா
நல்ல வழி தன்னையே
காட்டிவிடு மாரியாத்தா
உந்தன் பெருமையை
இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா
ஆயிரங்கண்
உடையவளே செல்லாத்தா
மக்களை ஆதரிக்க
வேண்டுமடி செல்லாத்தா
ஆயிரங்கண்
உடையவளே செல்லாத்தா
மக்களை ஆதரிக்க
வேண்டுமடி செல்லாத்தா
திரிசூலமுடன்
வீற்றிருக்கும் செல்லாத்தா
திரிசூலமுடன்
வீற்றிருக்கும் செல்லாத்தா
பாமாலை உனக்கு
பாடிடுவேன் செல்லாத்தா
பாமாலை உனக்கு
பாடிடுவேன் செல்லாத்தா
பசும்பாலைக் கறந்துகிட்டு
கறந்தபால எடுத்துகிட்டு
பசும்பாலைக் கறந்துகிட்டு
கறந்தபால எடுத்துகிட்டு
புற்றினிலே
ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்க பக்தியுடன்
ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
அம்மா தாயே கருமாரி
அருள்புரிவாயே சுகுமாரி
பாம்பாக மாறி அதை
பாங்காகக் குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை
இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து
அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன
பயனென்று சொல்லடி நீயாத்தா
ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா
எங்கள் ஆதி சக்தி மாதா
கருமாரி மாதா