Annai Annai Mangalam Lyrics in Tamil for Navarathri Special. Annai Annai Ambikaikku Mangalam Lyrics in Tamil from Amman Songs.
பாடல் வரிகள்
அன்னை அன்னை அன்னை
அன்னை அன்பினிற்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு
அனந்தகோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும்
எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும்
சிற் சிவைக்கு மங்களம்
உருகாத நெஞ்சம் உன்பால்
உருகிதா உருக்கத்தாலும்
பெருகாத கண்ணீர் ஆறாய்
பெருகிதா பெருக்கம் முன்னம்
சருகாத ஞானம் பூத்து
தழைத்து இன்ப கனியை காண
பருகாத மதுரை தேனை
பருகினேன் பயன் பெற்றேனே
எப்பிறப்பும் எய்த்தேனோ
இயற்கையான சித்தியை
இப்பிறப்பில் என் கரம்
இசைந்தளிக்கும் சக்தியாம்
பஞ்ச பூத பேதமாய்
பிரபஞ்சமாய் பிரகாண்டமாய்
விஞ்சினால் எனக்கு யோக
வீரளித்த தன்மையால்
தாழ்வில்லாத தன்மையும்
தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும்
என் வாக்கிலே வரங்களும்
பக்தியிலே கசிந் தலைந்து
பாடுகின்ற பாண்மையும்
பாடுவோருக்கு அநேக போக
பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து
இயற்கையான சித்தியும்
தந்து ஞான மூர்த்தியாய்
தனித்து வைத்த சக்தியும்
நாம கீர்த்தனம் பரந்து
நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி
வீடெல்லாம் விளங்கவும்
ஞான தீபமேற்றி எங்கும்
நாம கீதம் பாடுவோம்
தர்ம சக்தி வாழ்கவென்று
சந்ததம் கொண்டாடுவோம்
அன்னை அன்னை அன்னை
அன்னை அன்பினிற்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு
அனந்தகோடி மங்களம்