Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Kethara Gowri Kappu Song Lyrics in Tamil

Kethara Gowri Kappu Song Lyrics in Tamil from Durga Songs. Kethara or Kedara Gowri Kappu Song Lyrics for Navarathri Special.

பாடல் வரிகள்

முன்னின்று செய்யுள்
முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய்
எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு
பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா

காப்பெடுக்க வந்தேனே
கௌரியம்மாள் தாயாரே
காத்தென்னைத் தேற்றிடுவாய்
காளிமகா தேவியரே
காலமெல்லாம் நின்னரிய
காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்
எண்ணும் கருமங்கள்
இனிதாக முடித்துவிடு

பண்ணும் வினையாவும்
பனிபோலப் போக்கிடுவாய்
உண்ணும் உணவாக
உயிரினுக் குயிராக
என்றும் இருந்தே
எனைக்காத்து வந்திடுவாய்
காடும் கடந்துவந்தேன்
மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே
காப்பெனக்குத் தந்திடுவாய்
சூலம் கொண்டவளே
சுந்தர முகத்தவளே
அரியை உடையவளே
அம்மா காளிதாயே
கொடியமகிஷாசுரனைக்
கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும்
அழிக்கும் சுடர்க்கொடியே
சிவனை நினைத்தல்லோ
சீர்விரதம் நீயிருந்தாய்
பரனை நினைத்தல்லோ
பதிவிரதம் நீயிருந்தாய்
அரனை நினைத்தல்லோ
அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ
சங்கரிநீ நோன்பிருந்தாய்
ஐங்கரனைப் பெற்றவளே
அன்றுநீ நோன்பிருந்தாய்
விரதத்தைக் கண்டே
விழித்தான் சிவனவனும்
அம்மா உமை அணைத்தே
அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை
வழிவழியாக் காட்டிடுவீர்
நெறியறியாத் திகைப்போர்க்கு
நெறிமுறையைக் காட்டிவிடு
காப்பைப் புனைந்துவிடு
காலபயம் ஓட்டிவிடு
நூலைப் புனைந்துவிடு
நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு
வையகத்தில் வாழவிடு
காளிமகா தேவியரே
காப்பருளும் தேவியரே
காப்பைப் புனைபவளே
காப்பாய் இருப்பவளே
நாடு செழிக்கவென்றே
நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே
விழைகாப்பு அருளுமம்மா
நல்வாழ்வு வாழ்வதற்கு
நறுங்காப்பு அருளுமம்மா
அல்லல் அறுப்பதற்கே
அருட்காப்பு அருளுமம்மா
பிள்ளை அற்றவர்க்குப்
பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே
புனிதவதி தாயவளே
நான்விரும்பும் காப்பை
நலமுடனே தாருமம்மா
கல்வி சிறப்பதற்குத்
கலைமகளே வாருமம்மா
செல்வம் சிறப்பதற்குத்
திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு
வீரசக்தி தாருமம்மா
பாட்டுடைத் தலைவியரே
பராசக்தி தாயவளே
ஏட்டுடைத் தேவியரே
எல்லாம்மிகு வல்லபையே
காப்பெடுக்க வந்தேனம்மா
கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள்
பல்வகைத் திரவியங்கள்
நானுமக்குத் தாறேனம்மா
நயந்து எம்மைக் காருமம்மா
காளிமகா தேவியரே
காசினிக்கு வித்தவளே
வித்தை விதைப்பவளே
வினையாவும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம்
எல்லாம் உமதருளே
காசினியில் வேற்றுமையை
கணப்பொழுதே மாற்றிவிட்டால்
ஏசலின்றி வாழ்ந்திடுவோம்
ஏத்துபுகழ் தேவியளே
காப்பெனக்குப் போட்டுவிட்டால்
கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும்
நல்வாழ்வு மிகுந்துவரும்
தொடர்ந்து அணிவோர்க்கு
தொட்டதெல்லாம் ஜெயமாகும்
இசைந்து அணிவோர்க்கு
நினைத்ததெல்லாம் ஈடேறும்
நம்பி அணிவோர்க்கு
நல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம்
நலமுடனே இணைந்துவரும்
சந்தனச் சாந்தவளே
சங்கரியே சாந்தினியே
குங்குமப் பூச்சுவளே
குலக்கொழுந்தே கௌரியம்மா
காப்புக் கட்டிவிட்டுக்
கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு
என்றுமே இருந்தறியேன்
நாளும் பொழுதிலெல்லாம்
நறுங்காப்புக் கட்டதனில்
பூவும் நீருமிட்டுப்
போற்றி வணங்கிடுவேன்
காலைப் பொழுதெழுந்து
காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே
காளியுன்னைக் காணுகின்றேன்
காப்பெனக்குக் கையிலுண்டு
கடமைகளைச் செய்திடுவேன்
ஏய்ப்பவரைக் கண்டால்
எரிமலைபோற் கனன்றிடுவேன்
தீமைச் செயலெதுவும்
தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து
கண்திறந்து காட்டுமடி
சொல்லற்கு அரிதான
சோதிமிகு காப்பதனை
இருபது நாள்வரையில்
இசைவோடு தவமிருந்து
பக்தி மனதுடனே
பரவி அணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள்
சீர்பெருகு கௌரியவள்
முத்திக்கு வழியுமுண்டு
முக்கால உணர்வுமுண்டு
எச்சகத்தில் உள்ளோர் எல்லாம்
ஏற்றியெமைப் போற்றிடுவர்
சொற்சக்தி பொருட்சக்தி
துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம்
அருள்வாள் கௌரியவள்
கௌரிக் காப்பதனைக்
காலம் தவறாமல்
முறையாய் அணிந்துவர
முன்வினைகள் நீங்கிவர
ஞானம் ஓங்கிவர
நல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே
தெவிட்டாத தீங்கனியே
காளியாய் வந்தமர்ந்த
கௌரியே காப்பருளும்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.