Dhanam Tharum Kalvi Tharum Lyrics in Tamil for Saraswathi Pooja. Abirami Anthathi Dhanam Tharum Kalvi Tharum Lyrics in Tamil for Navarathri.
பாடல் வரிகள்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பாடலின் விளக்கம்
தனம் தரும் – எல்லாவிதமான செல்வங்களும் தரும்
கல்வி தரும் – எல்லாவிதமான கல்வியையும் தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் – என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்
தெய்வ வடிவும் தரும் – தெய்வீகமான உருவத்தையும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்
நல்லன எல்லாம் தரும் – இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்
அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் – எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே