Amman Alangaram Song Lyrics in Tamil | Amman Songs

Amman Alangaram Song Lyrics in Tamil from Aayiram Kannudaiyal Album. Amman Alangaram Song Lyrics has been written in Tamil by Sriram Sharma. This song was sung by Veeramanidasan.

Amman Alangaram Lyrics in Tamil

மண்ணாளும் நாயகியே
மஞ்சளுக்குள் வாழ்பவளே
எந்நாளும் என் நாவில் வந்து

எந்தன் விடு மூச்சும் நாடி ஒலியும்
உடுக்கை பம்பையென
துலுக்காநத்தம்மா நீ தோன்று

மாரிசன் துரை கண்டெடுத்த
ஆலந்தூரில் வாழும் எங்கள்
துளிர்காநத்தம்மா நீ தோன்று

அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்

அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

அம்மனுக்கு விரதம்
ஆதி முதல் இன்று வரை வழக்கம்
அம்மனுக்கு விரதம்
ஆதி முதல் இன்று வரை வழக்கம்

சமயபுரத்தில் நம்மை வாழ வைக்க
மாரியும் விரதம் கொண்டாலே
மாரி அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

ஜாதி என்ன ஜாதி
அம்மனுக்கு அன்பு ஒன்றே நீதி
ஜாதி என்ன ஜாதி
அம்மனுக்கு அன்பு ஒன்றே நீதி

பெரியபாளையத்தில்
வந்து பாருங்கம்மா
இந்த செய்தியை
சொல்லிடும் பூஜைகளை

அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

காற்று மழை வீச
வெக்காளிக்கு கூரை இல்லை வாழ
என்று பல சொல்லுவார்
அவர் ஒரு உண்மையைதான் அறியார்

கோவில் உள்ளம்
அதில் கூரை எங்கள் மனம்
குறையின்றி வெக்காளி
வாழ்ந்திருப்பாள்

அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

ஆதி சிவனாரின்
ஆட்டத்துக்கு ஈடு கொடுத்தாலே
ஆடும் சிவனாரின்
ஆட்டத்துக்கு சக்தி கொடுத்தாலே
என்றபோதும் ஒரு பெண்ணின்
உள்ளம் கொண்டு
தில்லை காளி வந்து நின்றாலே

அம்மா அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

ஐந்து தலை நாகம்
அதற்கு தாயின் முகம் ஒளிரும்
ஐந்து தலை நாகம்
அதற்கு தாயின் முகம் ஒளிரும்

வேண்டும் வரம் தர
வேற்காட்டுக்குள் நின்று
மோள தாளம் செய்யும்
மாரியம்மா

மாரி அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

முத்து கொடுத்திடுவாள்
பின்னே வந்து முத்தை எடுத்திடுவாள்
முத்து கொடுத்திடுவாள்
பின்னே வந்து முத்தை எடுத்திடுவாள்

நல்ல உள்ளம் கொண்ட நாயகி அவளை
புன்னைநல்லூர்தனில் கண்டேனே
மாரி அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

எல்லை இல்லா கருணை
வெட்டுவானா எல்லை அம்மன் விழியில்
எல்லை இல்லா கருணை
வெட்டுவானா எல்லை அம்மன் விழியில்

கொண்ட பிணிகளும் வந்த வினைகளும்
ஆத்தாவையே சொல்ல ஓடிடுதே
பாரு அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

மூன்று பெரும் சக்தி
முன்றெழுந்து வந்து நின்ற வைஷ்ணவி
மூன்று பெரும் சக்தி
முன்றெழுந்து வந்து நின்ற வைஷ்ணவி

பாண்டி மலை மேலே
அன்னை அவள் வழி மறுத்தாலே
கொண்ட தவத்தினில்
வந்த அசுரனை வேரோடு
சாய்த்தருள் புரிந்தாலே

அம்மா அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

கோல விழிகளிலே
கருணை பொங்கி வழியுது பார்
நீல விழிகளிலே
கருணை பொங்கி வழியுது பார்

கோர அரக்கனின் ஐந்து தலைகளை
பாதம் அழுத்திடும் கோபத்தை பார்
அம்மா அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

பத்து திக்குகளும் நீ
சுத்துகின்ற ஒன்பது கோள்களும் நீ
தேவியர் உருகட்டும் நீ
பாடுகின்ற ஏழு ஸ்வரங்களும் நீ

ஒரு சத்தியத்தில் இங்கு கட்டுப்பாடு
இந்த உலகம் சுற்றுகின்ற காரணம் நீ
தாயே அம்மன் அலங்காரம்
தினம் தினம் காண வரம் வேணும்
அம்மன் அலங்காரம்
கண்டுவிட்டால் நம்ம குறை தீரூம்

ஆறு சுவைகளும் நீ
பூமியினில் பஞ்ச பூதங்களும் நீ
நால்வகை வேதங்கள் நீ
இனிக்கும் நல்ல முக்கனிகள் நீ

விண்ணும் மண்ணும் அதில்
இன்பம் துன்பம் என எல்லாம்
இரண்டென செய்தவள் நீ

அம்மா முக்கண் சிவனாரும்
மயங்கும் ஆயிரம் கண்ணுடையாள்
எத்தனை உயிர்கள் பூமியில் உள்ளதோ
அத்தனைக்கும் முதலானவள் நீ

அம்மா சங்கவி சாம்பவியே
அருள்வாய் காளி மனோகரியே
சங்கவி சாம்பவியே
வருவா காளி மனோகரியே

சங்கவி சாம்பவியே
வருவா காளி மனோகரியே
சங்கவி சாம்பவியே
வருவா காளி மனோகரியே

சங்கவி சாம்பவியே
வருவா காளி மனோகரியே
சங்கவி சாம்பவியே
வருவா காளி மனோகரியே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *